ஏடிஎம் மையத்தில் நிரப்ப வேண்டிய பணத்தை கொள்ளையடித்த ஓட்டுநர்

சென்னை: ஏடிஎம் மையத்தில் நிரப்ப கொண்டுவரப்பட்ட வங்கிப் பணம் ரூ.1 கோடி கொள்ளையடிக்கப்பட்டது. நேற்று முன்தினம் தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர்கள் நால்வர் இப்பணியில் ஈடுபட்டிருந்தனர். வேலப்பன்சாவடி பகுதியில் உள்ள மையத்தில் பணம் நிரப்ப 2 ஊழியர்கள் பணத்துடன் உள்ளே செல்ல மற்ற இருவரும் வாகனத்தில் காத்திருந்தனர். அப்போது உடனிருந்த ஊழியரைக் கடைக்குச் சென்று பாக்கு வாங்கி வருமாறு கூறிய வாகன ஓட்டுநர் இசக்கிபாண்டி அந்த ஊழியர் திரும்புவதற்குள் காரில் மீதமிருந்த பணத்துடன் மாயமானார். இச்சம்பவம் குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.