பட்டப்பகலில் பிரபல ரவுடி நாட்டு வெடிகுண்டு வீசி படுகொலை

விழுப்புரம்: பட்டப்பகலில் நாட்டு வெடிகுண்டு வீசி பிரபல ரவுடி கொல்லப்பட்டதால் விழுப்புரத்தில் பதற்றம் நிலவியது. குயிலப்பாளையத்தைச் சேர்ந்த ரவுடி ஜனா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் நேற்று முன்தினம் ஒரு வழக்கு தொடர்பாக விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னிலையானார். அதன் பின்னர் தனது கூட்டாளிகள் ஆறு பேருடன் அவர் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது ரகசியமாகப் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் திடீரென அவர்களைத் தடுத்து நிறுத்தி தாக்குதல் நடத்தினர். அப்போது ஜனா மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டன. அவை வெடித்ததில் அவரது தலை சிதறியது. இதற்கு முன் விரோதம் காரணமாக இருக்கலாம் என விழுப்புரம் போலிசார் கருதுகின்றனர். இதையடுத்து ஜனாவுடன் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வந்த மற்றொரு ரவுடியான பூபாலனிடம் போலிசார் விசாரணை நடத்த உள்ளதாகத் தெரிகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!