சசிகலா புஷ்பா மனு: சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவைத் தவறாகச் சித்திரிக்கும் படங்களை வெளியிடக் கூடாது என டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. அவ்வாறு தவறாக படம் வெளியிடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. தம்மைத் தவறாகச் சித்திரிக்கும் புகைப்படங்களை சமூக வலைத் தளங்களில் சிலர் வெளியிட்டுள்ளதாக சசிகலா புஷ்பா புகார் எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதி மன்றம், அத்தகைய படங்களை நீக்குமாறு வாட்ஸ்அப், ஃபேஸ் புக், டுவிட்டர் நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.