இந்தியாவில் சிங்கப்பூரின் பயிற்சி மையத்தைத் திறந்துவைத்த பிரதமர்

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூர் நகரில் சுற்றுலாத் துறை திறன் பயிற்சி நிலையத்தை பிரதமர் லீ சியன் லூங் நேற்று அதிகாரபூர்வமாக திறந்து வைத்தார். ஐந்து நாள் அதிகாரபூர்வ பயணமாக இந்தியா சென்றுள்ள பிரதமர் லீ, தமது பயணத்தின் மூன்றாம் நாளான நேற்று புதுடெல்லியில் உள்ள அதிபர் இல்லத்தில் இந்திய அதிபர் பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசினார். பின்னர் புதுடெல்லியில் இருந்து விமானம் மூலம் உதய்ப்பூருக்கு  புறப்பட்டார் திரு லீ. விமானம் உதய்ப்பூரைச் சென்றடைய பத்து நிமிடங்களே இருந்த போது, மோசமான வானிலை காரணமாக மீண்டும் புது டெல்லிக்குத் திரும்பியது. இந்தத் தகவலைத் தமது ஃபேஸ்புக் பக்கம் மூலம் தெரி வித்த பிரதமர் லீ, வானிலை மீண்டும் சரியாகக் காத்திருப்ப தாகவும் சொன்னார்.

சிறிது நேரத்தில் வானிலை சரியாகவே, அவர் விமானம் மூலம் மீண்டும் உதய்ப்பூர் புறப்பட்டுச் சென்றார். அங்கு சிங்கப்பூரின் ‘கேப்பிட்டா லேண்ட்’ நிறுவனத்தால் கட்டப் பட்ட, ஆறு தளங்களைக் கொண்ட ‘செலிபிரேஷன் மால்’ எனும் வணிக வளாகத்திற்கு அவர் சென்றார். அந்த வணிக வளாகம் தனது ஐந்தாண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. சிங்கப்பூர் சொத்து மேம்பாட்டு நிறுவனத்தால் இந்தியாவில் நிறுவப்பட்டு, நிர்வகிக்கப்படும் நான்கு வணிக வளாகங்களில் இதுவும் ஒன்று. இதர மூன்று வணிக வளா கங்கள் பெங்களூரு, மங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் அமைந்துள்ளன. 2006ஆம் ஆண்டில் $2.6 பில்லியனாக இருந்த இந்தியா வுக்கான சிங்கப்பூரின் அந்நிய நேரடி முதலீடு 2014ல் $19.4 பில்லியனாக உயர்ந்தது.

ஐந்து நாள் பயணமாக இந்தியா சென்றுள்ள பிரதமர் லீ சியன் லூங் (வலது), புதுடெல்லியில் உள்ள அதிபரின் அதிகாரபூர்வ இல்லத்தில் இந்திய அதிபர் பிரணாப் முகர்ஜியை நேற்று சந்தித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பேய் போன்ற வேடமிட்ட இவர்கள் வாகனங்களில் சென்றவர்களை பயமுறுத்தியதுடன் நில்லாமல் திறந்த வெளியில் தூங்கிக்கொண்டிருந்தவர்களையும் குறிவைத்ததாகத் தெரிகிறது. படம்: ஊடகம்

13 Nov 2019

பேய் வேடமிட்டு பதற வைத்த இளையர்களைக் கைது செய்து கதறவிட்ட அதிகாரிகள்

காலக்கெடுவுக்குள் ஆட்சி அமைக்க இயலாததால், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மகாராஷ்டிர ஆளுநர் கோஷியாரி பரிந்துரைத்தார். படம்: ஊடகம்

12 Nov 2019

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி