தமிழக-கர்நாடக எல்லையில் பதற்றம் தணிந்தது

ஓசூர்: காவிரியில் இருந்து தமிழ கத்துக்குத் தண்ணீர் திறந்து விட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக கடந்த மாதம் 6ஆம் தேதி முதல் இரு மாநிலங்களுக்கு இடையி லான போக்குவரத்து முடங்கியது. வேலூரில் இருந்து பெங்களூ ருவுக்கு தினந்தோறும் இயக்கப்ப டும் 36 அரசுப் பேருந்துகள், சென்னையில் இருந்து வேலூர் வழியாக பெங்களூருவுக்குச் செல் லும் 20 அரசு விரைவுப் பேருந்து கள், 20க்கும் அதிகமான தனியார் பேருந்துகள் போன்றவை நேற்று முன்தினம் வரை தமிழக எல்லை யான ஒசூர் வரை மட்டுமே இயக் கப்பட்டன. இதனால் ஒரு மாநிலத்தி லிருந்து மற்றொரு மாநிலத்திற்குச் செல்ல சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

பேருந்து போக்குவரத்து நிறுத் தப்பட்டதையடுத்து பெரும்பாலா னோர் ரயில்களில் பயணம் செய் தனர். சென்னையில் இருந்து தினந்தோறும் இயக்கப்படும் பிருந்தாவன், லால்பார்க், பெங்க ளூரு விரைவு ரயில், டபுள் டெக்கர் ரயில்களை பொதுமக்கள் அதிகள வில் பயன்படுத்தி வந்தனர். ஒசூர் மாவட்டம் ஜூஜூவாடி எல்லை வாயிலாக கர்நாடகா பதிவு எண் கொண்ட லாரி, கார் உள் ளிட்ட வாகனங்கள் தடையின்றி வந்து சென்றாலும் தமிழகத்தி லிருந்து செல்லும் வாகனப் போக் குவரத்து முற்றிலுமாகத் தடைபட்டி ருந்தது. இந்நிலையில், கிட்டத்தட்டட ஒரு மாதத்திற்குப் பிறகு நேற்று ஜூஜூவாடி எல்லையில் தமிழக வாகனப் போக்குவரத்து சீரானது. இரு மாநில எல்லையில் பதற்றம் தணிந்து அமைதி திரும்பியுள்ள தால் நேற்றுக் காலை முதல் பெங் களூருவுக்கு லாரிகள் ஓடின.

கூரையில் இடம் கிடைத்தால்கூட போதும் என்று முண்டியடித்துக் கொண்டு பேருந்தில் ஏறும் பயணிகள். படம்: ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!