கள்ளப் பணமாகக் கொட்டிய ஏடிஎம்... எல்லாமே 500 ரூபாய் நோட்டுகள்

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பேங்க் ஆஃப் பரோடா ஏடிஎம் எந்திரத்தில் கள்ள நோட்டுகள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டைச் சேர்ந்தவர் தமிழரசு. சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே கூட்டுறவு பண்டக சாலையில் ஊழியராகப் பணி யாற்றி வரும் அவர் நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து வீட்டுக்குப் புறப்பட்டார். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க சென்ட்ரல் ரயில் நிலைய வாசலில் உள்ள பேங்க் ஆஃப் பரோடா வங்கி யின் ஏடிஎம்மில் தனது அட்டையைப் பயன்படுத்தி 14,000 ரூபாய் ரொக்கம் எடுத்துள்ளார்.

ஏடிஎம் எந்திரத்தில் இருந்து 27 ஐந்நூறு ரூபாய் நோட்டுகளும் ஐந்து நூறு ரூபாய் நோட்டு களும் வந்தன. இதில் நூறு ரூபாய் நோட்டு கள் மட்டுமே நல்லவையாக இருந்தன. எஞ்சிய 27 ஐந்நூறு ரூபாய் நோட்டுகளும் கள்ள நோட்டுகள் என அவருக்குத் தெரிய வந்தது. கடை ஒன்றில் பொருட்களை வாங்கிவிட்டுப் பணம் செலுத்தியபோது 500 ரூபாய் நோட்டைச் சோதனை யிட்ட கடைக்காரர் அது கள்ள நோட்டு என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து கையிலிருந்த எல்லா 500 ரூபாய் நோட்டுகளையும் கடைக்காரர் சோதித்து அவையும் கள்ளநோட்டுகள் தான் என்று கூறி இருக்கிறார். அதிர்ச்சி அடைந்த தமிழரசு இது குறித்து பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலிசாரின் தக வலைத் தொடர்ந்து வங்கி அதி காரிகள் விரைந்து வந்தனர். அந்த ஏடிஎம்மில் மேலும் கள்ள நோட்டுகள் உள்ளனவா என்று அவர்கள் ஆய்வு செய்தனர். இச்சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்கிறது.

பேங்க் ஆஃப் பரோடா ஏடிஎம் கூடம். படம்: தமிழக ஊடகம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பேய் போன்ற வேடமிட்ட இவர்கள் வாகனங்களில் சென்றவர்களை பயமுறுத்தியதுடன் நில்லாமல் திறந்த வெளியில் தூங்கிக்கொண்டிருந்தவர்களையும் குறிவைத்ததாகத் தெரிகிறது. படம்: ஊடகம்

13 Nov 2019

பேய் வேடமிட்டு பதற வைத்த இளையர்களைக் கைது செய்து கதறவிட்ட அதிகாரிகள்

காலக்கெடுவுக்குள் ஆட்சி அமைக்க இயலாததால், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மகாராஷ்டிர ஆளுநர் கோஷியாரி பரிந்துரைத்தார். படம்: ஊடகம்

12 Nov 2019

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி