‘ஜிசாட்- 18’ வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

புதுடெல்லி: இந்தியாவின் ‘ஜிசாட்- 18’ துணைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து “இது நமது விண் வெளித் திட்டத்தில் மேலும் ஒரு மைல்கல். இதற்காக விஞ்ஞானி களைப் பாராட்டுகிறேன்” என்று பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தகவல் தொடர்புச் சேவையை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்திய விஞ்ஞானிகள் அதிநவீன ‘ஜிசாட்-18’ எனும் துணைக்கோளை ரூ.1,000 கோடி செலவில் தயாரித் துள்ளனர். நேற்று வியாழன் அதி காலை 2 மணி அளவில் இந்தத் துணைக்கோள் பிரெஞ்சு கயானா தளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. இது இந்தியாவின் 20-வது துணைக்கோள். 3,404 கிலோ எடையுள்ள இந்தக் கோளில் 48 ரேடியோ அலைகளை வாங்கிச் செலுத்தும் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.