100 டாலருக்கு ஐஎஸ்சில் போர் புரிந்த தமிழக இளையர்

ஐஎஸ் அமைப்­பு­டன் தொடர்புடைய வர் என்ற சந்­தே­கத்­தின் அடிப்­படை­யில் கடை­ய­நல்­லூ­ரில் கைது செய்­யப்­பட்ட சுபுஹானி காஜா முகைதீன் ஈராக்­கில் ஐஎஸ் இயக்­கத்­து­டன் இணைந்து போர் புரிந்த­தாக வாக்­கு­மூ­லம் அளித்­துள்ளார். கேரள மாநி­லத்­தில் கடந்த 2ஆம் தேதி ஐஎஸ் பயங்க­ர­வாத அமைப்­பு­டன் தொடர்­புடை­ய­வர்­கள் என நம்பப்­படும் அறுவர் கைது செய்­யப்­பட்டு விசா­ரணை செய்யப்பட்டு வரு­கின்ற­னர். அவர்­களில் ஒருவரான சுபுஹானியின் வாக்குமூலங்கள் மூலம் ஐஎஸ் அமைப்பின் செயல் பாடுகள், பயிற்சிகள், சமய வகுப்பு கள், நிதி சேர்ப்பு, போரில் பெண்களின் பங்கு போன்றவை குறித்து இந்திய தேசிய புலனாய்­வுத் துறைக்கு புதிய தகவல்கள் கிடைத்து வருகின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்த 60 பேர்களில் சுபுஹானியின் கைது மிக முக்கியமானது என மூத்த உள்துறை அதிகாரிகள் கூறியுள்ள னர். சுபுஹானி, ஐஎஸ்சின் செயல் பாட்டு முறைகளைத் தெரிந்த முக்கிய ஆள் எனக் கூறப்படுகிறது. சமூக இணை­யத்­த­ளங்கள் மூலம் ஐஎஸ் இயக்­கத்­தி­ன­ரு­டன் தொடர்பு கொண்ட சுபுஹானி ஈராக் சென்றார். தொடர்ந்து சிரியாவில் மூன்று மாத பயிற்சிக்குப் பின்னர் மொசூலில் தீவிர பயிற்சி பெற்றுதும் போர்க்­க­ளம் சென்றதாக சுபுஹானி விசாரணையில் கூறியுள்ளார். “உணவு, தங்க இடம் ஆகி­ய­வற்­று­டன் மாதம் 100 அமெ­ரிக்க டாலர் மானி­ய­மாகக் கொடுத்தனர்,” என்றும் அவர் தெரிவித்தார். செப்டம்பர் மாதம் இஸ்தான்புல்லில் இருந்து மும்பை வந்துள்ளார்.

அங்கிருந்து திருநெல்வேலிக்கு வந்த சுபுஹானி ஐஎஸ் ஆத­ர­வா­ளர்­களு­டன் இணைந்து தமிழ்­நாடு உட்­ப­ட தென்­மா­நி­லங்களில் தாக்­கு­தல் நடத்­த­வும் முக்கிய பிர­மு­கர் ­களைக் கொல்­ல­வும் திட்டமிட்டுள்ள தாக இந்திய தேசிய புலனாய்வுத் துறை கூறியது. வெடி­குண்டு தாக்­கு­தல் நடத்த சிவ­கா­சி­யில் வெடி பொருட்­கள் வாங்க­வும் முயன்­றுள்­ளார். இது ­கு­றித்து அதி­கா­ரி­கள் விசாரணை செய்து வரு­கின்ற­னர். அத்துடன் கைதா­ன­வர்­கள் அளித்த தக­வல்­களைத் தொடர்ந்து கோவையில் மேலும் 11 பேரைக் கைது செய்­து தேசிய புலனாய்­வுத் துறை அதி­கா­ரி­கள் தீவிர விசாரணை மேற்­கொண்­டு வருகின்றனர்.

Loading...
Load next