22 விமான நிலையங்களில் நிலவும் தாக்குதல் அபாயம்

புதுடெல்லி: டெல்லி உட்பட 22 விமான நிலையங்களில் தாக்குதல் நடத்தப்படும் அபாயம் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத் துள்ளது. இதன் காரணமாக ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ் தான், குஜராத் ஆகிய நான்கு மாநிலங்களிலும் டெல்லி நகரிலும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தர விடப்பட்டுள்ளது.

உளவுத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை அறிக்கையில், சுமார் 100 தீவிரவாதிகள் குளிர்காலத் திற்கு முன்னதாக இந்தியா விற்குள் நுழைய உள்ளனர். இந்தியாவின் எல்லையோர மாநிலங்களான ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் குஜராத் ஆகிய மாநிலங்களிலும் டெல்லி நகரில் உள்ள அனைத்துலக விமான நிலையங்களிலும் பாது காப்பை பலப்படுத்த வேண்டும்.

அத்துடன், பண்டிகைக் காலம் நெருங்கி வருவதால் விமான நிலைய பாதுகாப்புப் படை, மாநிலத் தலைமைக் காவல்துறை, மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை, விமான நிலையப் பாதுகாப்புப்படை உள்ளிட்ட பிரிவினர் எச்சரிக் கையுடன் செயல்படவேண்டும்.

விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் கொண்டுவரும் பொருட்களையும் அவர்களது உடைமைகளையும் தீவிர சோத னைக்கு பிறகே அனுப்பி வைக்க வும் விமான நிலைய வளாகங்களுக்கு வரும் வாகனங்களைத் தீவிர கண்காணிப்பிற்கு உட் படுத்த வேண்டும் எனவும் சந்தேகத்தின் பேரில் நிற்கும் வாகனங்களை உடனடியாக சோதித்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்திய ராணுவம் கடந்த 28ஆம் தேதி நள்ளிரவு ஊடுருவி மறுநாள் காலை 4.30 மணிவரை பயங்கர வாதிகள் முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாதிகள் 40 பேர் கொல்லப் பட்டனர். பயங்கரவாதிகளின் 7 முகாம்களை துடைத்து ஒழித்தனர். இதற்கு பதிலடியாக விமான நிலையங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சுறுத்தல் நிலவுகிறது. இந் நிலையில், நாட்டின் எல்லை யோரம் உள்ள மாநிலங்களுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத் துள்ளதால் அந்தந்த மாநில அதி காரிகளும் விழிப்புடன் அணுக்க மாக கண்காணித்து வருகின்றனர்.2016-10-08 06:00:00 +0800