உச்ச நீதிமன்றம்: பெற்றோரிடம் இருந்து கணவரைப் பிரித்தால் விவாகரத்து செய்யலாம்

கர்நாடகா: வயது முதிர்ந்த பெற்றோரிடம் இருந்து கணவரைப் பிரிக்க முயலும் மனைவியை இந்து மதத்தை பின்பற்றும் கணவர் விவாகரத்து செய்ய சட்டத்தில் இடமுண்டு என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். கர்நாடகாவைச் சேர்ந்த தம்பதிகளின் விவகாரத்து மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இக்கருத்தைத் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.ஆர்.தவே, எல்.நாகேஸ்வர ராவ் அடங்கிய அமர்வு “வயது முதிர்ந்த பெற்றோரிடம் இருந்து பிரிக்க முயலும் மனைவியை கணவர் விவா கரத்து செய்ய சட்டத்தில் இடமுண்டு. இந்திய நாட்டில் இந்து மதத்தைப் பின்பற்றும் ஒரு ஆண் அவரது தாய் தந்தையை விட்டுப் பிரிந்து வாழ்வது என்பது கலாசாரத் துக்கு எதிரானது. அதுவும் பெற்றோர் சம்பாதிக்க முடியாத நிலையில் இருக்கும்போது மகன் அவர்களைப் பிரிந்து செல்லவே கூடாது.

“பெற்றோரால் சீராட்டி, கல்வி கற்பிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட ஆணுக்கு முதுமையில் அவர்களைப் பேணும் பொறுப்பும் கடமை யும் உள்ளது. திருமணத் துக்கு பின்னர் மனைவி கணவரின் குடும்பத்தின ருடன் வாழவேண்டும் என்றே எதிர்பார்க்கப் படுகிறது. எனவே உரிய வலுவான காரணமின்றி கணவர் பெற்றோரைப் பிரிந்து தன்னுடன் தனிக் குடித்தனத்துக்கு வரவேண் டும் என மனைவி எதிர்பார்க் கக் கூடாது,” என்றனர்.2016-10-08 06:00:00 +0800

Loading...
Load next