பாகிஸ்தான்: இந்திய ஊடகத் தகவல் போலியானது

இஸ்லாமாபாத்: ‘சர்ஜிகல்’ தாக்குதல் நடைபெற்றதை பாகிஸ்தான் அதிகாரி ஒப்புக்கொண்டதாக வெளியான தகவலை “இந்திய ஊடகத் தகவல் பொய்யானது,” என்று கூறி பாகிஸ்தான் மறுத்துள்ளது. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வரும் குலாம் அக்பர், தான் தொலைபேசியில் யாருடனும் பேசவில்லை என்றும் தொலைக் காட்சியில் ஒலிபரப்பானது தனது குரல் இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. மேலும், அந்தத் தொலைக்காட்சிக்கு எதிராக சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம் என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்திய ராணுவம் கடந்த 28ஆம் தேதி நள்ளிரவு ஊடுருவி மறுநாள் காலை 4.30 மணிவரை பயங்கர வாதிகள் முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாதிகள் 40 பேர் கொல்லப் பட்டதாகவும் பயங்கரவாதிகளின் 7 முகாம்கள் துவம்சம் செய்யப் பட்டதாகவும் ராணுவம் சொன்னது.

‘சர்ஜிகல்’ தாக்குதல் என்று இதற்கு இந்திய ராணுவம் பெயர் சூட்டியது. ஆனால் இப்படியொரு தாக்குதல் நடத்தப்படவில்லை என்று பாகிஸ்தான் மறுத்து வருகிறது. காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற எதிர்க்கட்சிகள் இது தொடர்பான ஆதாரங்களை வெளி யிடவேண்டும் என்று மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றன.

இந்நிலையில், இந்திய ராணுவத்தின் மீது நம்பிக்கையற்ற நிலையை எண்ணி வருந்துவதாக கெஜ்ரிவால் மீதும் ப. சிதம்பரம் மீது பாஜக குற்றம்சாட்டியது. இதற்கிடையே, பாகிஸ்தான் அரசு அதிகாரபூர்வமாக இந்த தாக்குதல் நடைபெறவில்லை என்று கூறினாலும் அந்நாட்டில் உள்ள சில அதிகாரிகள் சர்ஜிகல் ஸ்டிரைக் நடைபெற்றதை ஒப்புக் கொண்டதாக ஆங்கில செய்தி தொலைக்காட்சியான் ‘நியூஸ் 18’ செய்தி ஒளிபரப்பியது.

பாகிஸ்தானின் மிர்பூர் சரகத்தில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் குலாம் அக்பர் என்ற போலிஸ் அதிகாரி, ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடைபெற்ற தாகவும் இதில் 5 வீரர்களும், பல பயங்கரவாதிகளும் கொல்லப்பட்ட தாகவும் கூறுவது போன்ற பேட்டி ஒளிபரப்பானது. இந்தப் பேட்டியின் மூலம் பாகிஸ்தானின் முகத்திரை கிழிந்த நிலையில் அந்தப் பேட்டி போலியானது என்று அந்நாடு மறுப்பு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த போராட்டக்காரர்கள் லாகூரில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உருவ பொம்மையைத் தீயிட்டுக் கொளுத்தி தங்களது எதிர்ப்பைக் காட்டுகின்றனர். படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

உச்ச நீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக பாப்டேவுக்கு அதிபர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். படம்: ஊடகம்

19 Nov 2019

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பாப்டே பதவியேற்பு

இந்தியாவில் சிறந்த தேனிலவுத் தளமாக கேரளா தேர்வு செய்யப்பட்டுள்ளது. கோப்புப் படம்: ஊடகம்

19 Nov 2019

சிறந்த தேனிலவு தளமாக தேர்வு பெற்ற கேரளாவுக்கு விருது

விபத்து ஏற்பட்ட பகுதியில் பொதுமக்களும் மீட்புப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சாலையில் கவிழ்ந்த பேருந்தும் லாரியும் பின்னர் அப்புறப்படுத்தப் பட்டன. படம்: ஊடகம்

19 Nov 2019

பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட கோர விபத்தில் 10 பேர் பலி; 25 பேர் படுகாயம்