ஐஎஸ் பயங்கரவாதிகள் நடமாட்டம்: புகார் எழுப்பும் தமிழிசை

விருத்தாச்சலம்: தென் மாவட்டங் களில் ஐஎஸ் பயங்கரவாதிகளின் நடமாட்டம் காணப்படுவதாக தமிழக பாஜக தலைவி தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித் துள்ளார். மதுரையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், தமிழகத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை முடிவுக்கு கொண்டு வர காவல்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தி னார். “டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கச் சென்ற அதிமுக நாடா ளுமன்ற உறுப்பினர்களை அவர் புறக்கணித்ததாகக் கூறப்படுவது சரியல்ல. பிரதமரைச் சந்திக்க அதிமுகவினர் முன்கூட்டியே அனுமதி பெறவில்லை.

“தமிழகத்தில், குறிப்பாக தென் மாவட்டங்களில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளது. அவர்களைக் கைது செய்ய போலிசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடுக ளுக்கு வேலைக்குச் செல்வோர் ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்துக் கொள்கிறார் கள். அதன் பிறகு அவர்களால் தாயகம் திரும்ப முடியாத நிலை ஏற்படுகிறது,” என்றார் தமிழிசை. காவிரி பிரச்சினையை தமி ழகக் கட்சிகள் அரசியலாக்குவ தாகக் குறிப்பிட்ட அவர், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் தேவையில்லை என ஒருபோதும் கூறவில்லை என்றார்.

Loading...
Load next