காவல்துறை வெளியிட்ட புகைப்படத்தால் குழப்பம்: போலிசிடம் கதறிய இருவர்

கோவை: கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளை அடையாளம் காணும் பொருட்டு போலிசார் வெளியிட்ட புகைப்படங் களில் தங்களது படமும் தவறாக இடம்பெற்று இருப்பதாக காவல் துறையில் இருவர் முறை யிட்டுள்ளனர். அண்மையில் கோவையைச் சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் மர்ம நபர்களால் படு கொலை செய்யப்பட்டார். இதைய டுத்து கோவையில் கலவரம் வெடித்தது. அதன் தொடர்ச்சியாக ஏறத்தாழ 500 பேர் கைதாகினர். சசிகுமார் கொலை செய்யப்பட்ட அன்றே அவர் சென்று வந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலிசார் தீவிரமாக ஆராய்ந்தனர். இதன் மூலம் 4 பேர் சந்தேக வளை யத்துக்குள் கொண்டு வரப்பட்ட னர்.

இதையடுத்து நால்வரின் புகைப்படங்களும் வெளியிடப்பட் டது. அவர்களைப் பற்றிய தகவல் தெரிந்தால் உடனடியாக காவல் துறையிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தங்களது புகைப் படத்தை போலிசார் தவறுதலாக வெளியிட்டதாக இருவர் தெரி வித்துள்ளனர். சம்பந்தப்பட்ட இருவரும் நேற்று முன்தினம் சிபிசிஐடி அதிகாரிகள் முன்பு நேரில் முன்னிலையாகினர். அப்போது சசிகுமார் படு கொலைக்கும் தங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித் தனர். கொலை நடந்த போது தாங்கள் இருவரும் அப்பகுதியில் இல்லை என்றும், உரிய ஆதா ரங்களுடன் இருவரும் விளக்கம் அளித்ததாகக் கூறப்படுகிறது. இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்ட போலிசார் உண்மைக் குற்றவாளிகளை அடையாளம் காணும் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தி உள்ளனர். சந்தேக வளையத்தில் உள்ள மற்ற இருவரைப் பற்றி தகவல் ஏதும் இல்லை. இதனால் சசிகுமாரின் கொலை தொடர்பான மர்மம் நீடித்து வருகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பிரசாதம் வாங்க நெகிழிப் பைகளுக்குப் பதில்  சணல், காகிதம், அட்டை போன்றவற்றாலான பைகள், பெட்டிகள் பயன்படுத்தப்பட வேண்டும் பக்தர்களை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. கோப்புப்படம்

20 Nov 2019

சணல் பையில் லட்டு; திருமலை ஆலய நிர்வாகம் முடிவு