போதைப்பொருள் கடத்தல்: நைஜீரியருக்கு ஈராண்டு சிறை

சென்னை: தபால் மூலம் போதைப்பொருள் கடத்த முயன்ற வழக்கில் நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவருக்கு ஈராண்டு சிறைத் தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது. சென்னையில் தங்கியிருக்கும் வெளிநாட்டு நபர் ஒருவர் தென் ஆப்பிரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தப் போவதாக மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலி சாருக்கு 2014ஆம் ஆண்டு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்னை அம்பத்தூர் தபால் அலுவலகம் அருகே அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது, நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஹென்றி சிதி (38) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், தென் ஆப்பிரிக்காவுக்கு மூன்று பார்சல்களை அனுப்ப தாம் தபால் அலுவலகம் வந்ததாக அவர் கூறினார்.

அந்தப் பார்சல்களை அதிகாரிகள் பிரித்துப் பார்த்தபோது, அதில் ‘ஹெராயின்’ போதைப்பொருள் இருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, போலிசார் அவரைக் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை சென்னையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெ.ஜெஸ்டீன் டேவிட், குற்றவாளி ஹென்றி சிதிக்கு ஈராண்டு சிறையும் ரூ.60 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

விபத்து ஏற்பட்ட பகுதியில் பொதுமக்களும் மீட்புப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சாலையில் கவிழ்ந்த பேருந்தும் லாரியும் பின்னர் அப்புறப்படுத்தப் பட்டன. படம்: ஊடகம்

19 Nov 2019

பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட கோர விபத்தில் 10 பேர் பலி; 25 பேர் படுகாயம்

நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெற எதிர்க்கட்சிகள் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். கோப்புப்படம்: ஏஎப்பி

19 Nov 2019

பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாக விவாதிக்க தயார் என்கிறார் பிரதமர்

உச்ச நீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக பாப்டேவுக்கு அதிபர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். படம்: ஊடகம்

19 Nov 2019

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பாப்டே பதவியேற்பு