சென்னையில் 2,500 கோடி ரூபாய் செலவில் நவீன விமான நிலையம்

புதுடெல்லி: சென்னை விமான நிலையத்தை நவீனப்படுத்தும் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் தெரிவித் துள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலை யத்தை ஒவ்வோர் ஆண்டும் பல லட்சம் பயணிகள் உள்நாட்டு போக்குவரத்துக்கும் வெளிநாட்டுப் போக்குவரத்துக்கும் பயன்படுத்தி வருகிறார்கள். பயன்பாட்டை அதிகரித்து பயணிகளின் எண்ணிக்கையைப் பெருக்கும் வகையில் விமான நிலையத்தை நவீனப்படுத்த விமான நிலைய மேம்பாட்டு ஆணையம் திட்டமிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டது.

அதனைத் தொடர்ந்து, விமான நிலையத்தை முழு அளவில் நவீனப் படுத்த ரூ.2,587 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. பின்னர், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதிக்காக விமான நிலைய மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் விண்ணப் பித்தனர். இதனை ஏற்று சென்னை விமான நிலையத்தை நவீனப் படுத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இப்போது அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன் தமிழக மாசுக் கட்டுப் பாட்டு வாரியம் மூலம் சுற்றுப்புறப் பகுதி மக்களின் கருத்துகளைக் கேட்கவும் அறிவுறுத்தப்பட்டுள் ளது.

சென்னை விமான நிலையத்தின் இப்போதைய பரப்பளவு 1,301.28 ஏக்கர். இதில் தற்போது உள்ள இரண்டாவது, மூன்றாவது முனையங்கள் மிகவும் பழையவை. அந்த இரு முனையங்களையும் முற்றாக அகற்றிவிட்டு அந்த இடத்தில் புதிய கட்டமைப்பு மேற் கொள்ளப்பட உள்ளது. புதிய கட்டமைப்பில் பல அடுக்கு வாகன நிறுத்தம் உள்ளிட்ட பல் வேறு வசதிகள் செய்யப்பட உள்ளன. விமான நிலையம் நவீனமா வதன் மூலம் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

விபத்து ஏற்பட்ட பகுதியில் பொதுமக்களும் மீட்புப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சாலையில் கவிழ்ந்த பேருந்தும் லாரியும் பின்னர் அப்புறப்படுத்தப் பட்டன. படம்: ஊடகம்

19 Nov 2019

பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட கோர விபத்தில் 10 பேர் பலி; 25 பேர் படுகாயம்

நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெற எதிர்க்கட்சிகள் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். கோப்புப்படம்: ஏஎப்பி

19 Nov 2019

பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாக விவாதிக்க தயார் என்கிறார் பிரதமர்

உச்ச நீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக பாப்டேவுக்கு அதிபர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். படம்: ஊடகம்

19 Nov 2019

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பாப்டே பதவியேற்பு