விஷம் கலந்த மது: ஓசியில் வாங்கி குடித்த இருவர் உயிர் ஊசலாட்டம்

வேலூர்: மதுவில் விஷம் கலந்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றவரிடம் ஓசியில் மது வாங்கிக் குடித்தவர்களின் உயிர் ஊசலாடுகிறது. வேலூரைச் சேர்ந்த 23 வயதான சரத்குமார் குடும்பப் பிரச்சினை காரணமாக உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்தார். இதற்காக வெள்ளிக்கிழமை மதுபான மையம் சென்ற அவர், அங்கு வாங்கிய மதுவில் விஷம் கலந்து குடித்தார். அப்போது அங்கு வந்த அவரது நண்பர்கள் தங்களுக்கும் மது வேண்டும் எனக் கேட்டுள்ளனர்.

அதற்கு, தான் அருந்தும் மதுவில் விஷம் கலந்திருப்பதாக சரத்குமார் கூறியும் அதை நம்பாத நண்பர்கள் இருவரும் அவர் பொய் சொல்வதாகக் கருதி மதுவைக் குடித்துள்ளனர். இதையடுத்து மயங்கி விழுந்த மூவரும் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகின்றனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

விபத்து ஏற்பட்ட பகுதியில் பொதுமக்களும் மீட்புப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சாலையில் கவிழ்ந்த பேருந்தும் லாரியும் பின்னர் அப்புறப்படுத்தப் பட்டன. படம்: ஊடகம்

19 Nov 2019

பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட கோர விபத்தில் 10 பேர் பலி; 25 பேர் படுகாயம்

நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெற எதிர்க்கட்சிகள் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். கோப்புப்படம்: ஏஎப்பி

19 Nov 2019

பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாக விவாதிக்க தயார் என்கிறார் பிரதமர்

உச்ச நீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக பாப்டேவுக்கு அதிபர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். படம்: ஊடகம்

19 Nov 2019

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பாப்டே பதவியேற்பு