சசிகலாவை விரட்ட சசிகலா புஷ்பா அழைப்பு

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டதன் பின்னணியில் மர்மம் இருப்பதாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப் பினர் சசிகலா புஷ்பா புகார் எழுப்பி உள்ளார். டெல்லியில் செய்தியாளர்களி டம் பேசிய அவர், இது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என் றும் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற சதி நடப்பதாகவும் கூறியுள்ளார். அனைத்துக் கட்சித் தலைவர் களாலும் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஜெயலலிதாவை அருகில் சென்று பார்க்க இயலவில்லை என சுட்டிக்காட்டியுள்ள அவர் தமிழக அரசு அதிகாரிகளை தற்போது யார் கட்டுப்படுத்துகிறார் கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

"அதிமுகவையும் ஆட்சியையும் கைப்பற்ற சசிகலா நடராஜன் கும்பல் சதி செய்கிறது. இதனால்தான் சசிகலாவை கட்சியின் துணைப் பொதுச் செயலராக்குங்கள், தஞ்சாவூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக நிறுத்துங்கள் என சொல்ல வைக்கின்றனர். "அதிமுகவில் ஜெயலலிதா வுக்கு அடுத்ததாக சசிகலா நடராஜனை ஒருபோதும் யாரும் ஏற்க மாட்டார்கள். அதிமுகவை சசிகலா கும்பல் கைப்பற்றிவிடுமோ, அவர் களது உறவினர்களுக்கும் அவர்க ளுக்கு வேண்டப்பட்டவர்களுக்கும் மட்டுமே பதவி உள்ளிட்ட அனைத் துமே கிடைத்துவிடுமோ என்ற அச்சத்தில் அதிமுக தொண்டர்கள் உள்ளனர்," என்றார் சசிகலா புஷ்பா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!