கார் பதிவெண்ணுக்கு $12 மி. விலை கொடுத்த இந்தியர்

துபாயில் நடந்த சாலை, போக்கு வரத்து ஆணையத்தின் பதிவெண் ஏலக்குத்தகையின்போது ஒற்றை இலக்கம் கொண்ட கார் பதிவெண் ணுக்காக இந்தியத் தொழிலதிபர் ஒருவர் 33 மில்லியன் திர்ஹாம், அதாவது S$12.3 மி. (ரூ.60 கோடி) விலை கொடுத்திருப்பது பெரும் வியப்பிற்குரிய விஷயமாகப் பேசப்படுகிறது. பல்விந்தர் சகானி (படம்) என்ற அந்தத் தொழிலதிபர் ‘D5’ என்ற எண்ணுக்காகத்தான் அவ்வளவு விலைகொடுத்தார். ‘ஆர்எஸ்ஜி இன்டர்நேஷனல்’ எனும் சொத்து நிர்வாக நிறுவனத்தின் உரிமை யாளர் இவர். “தனிச்சிறப்புமிக்க பதிவெண்களைச் சேகரிப்பது எனக்கு விருப்பமான விஷயம். இந்த எண்ணை வாங்கியதில் பெருமை அடைகிறேன். எண் ‘9’ஐ நான் நேசிக்கிறேன். D5ஐக் கூட்டும்போது ‘9’ வருகிறது. ஆகவே, இதனை வாங்கினேன்,” என்றார் திரு பல்விந்தர்.

இதேபோல, கடந்த ஆண்டு நடந்த ஏலத்தில் ‘O9’ என்ற பதி வெண்ணை 25 மி. திர்ஹாம் (S$9.3 மி.) விலைகொடுத்து இவர் வாங்கியிருந்தார். ‘D5’ உடன் சேர்த்து இதுவரை பத்து கார் பதிவெண்களை வாங்கி இருக்கும் இவர், இன்னும் பல வித்தியாசமான கார் பதிவெண் களை வாங்க ஆர்வமாக உள்ளார். தம்மிடம் இருக்கும் ‘ரோல்ஸ் ராய்ஸ்’ கார்களில் ஒன்றுக்கு ‘D5’ பதிவெண்ணைப் பயன்படுத் தப்போவதாக இவர் சொன்னார். துபாயில் இரு மாதங்களுக்கு ஒருமுறை நடக்கும் கார் பதிவெண் களுக்கான ஏலக்குத்தகையில் சில தனித்தன்மைமிக்க எண் களைப் பெற கடும் போட்டி நிலவும் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கோவிலுக்கு வரவேண்டும் என யாராவது நினைத்தால், நீதிமன்றம் சென்று உரிய உத்தரவுகளுடன் வந்தால் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்தார். படங்கள்: ஊடகம்

15 Nov 2019

அமைச்சர்: சபரிமலைக்கு வரும் இளம்பெண்களுக்கு பாதுகாப்பு தரமாட்டோம்

மனிதர்கள் சுவாசிக்கத்  தகுதியற்ற அளவிற்கு காற்று மாசடைந்து உள்ளதால் இம்மாதம் முதல்  தேதி அங்கு மருத்துவ அவசர நிலை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. படம்: ஊடகம்

15 Nov 2019

புதுடெல்லி: சுவாசிக்க காற்றை விற்பனை செய்யும் ‘ஆக்சிஜன் பார்’