குடிநீருக்காக நெடுந்தூரம் அலையும் சிவகங்கை மக்கள்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் நிலவிவரும் கடும் வறட்சி காரணமாக குடிநீருக்காக பொதுமக்கள் பல கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து அலைய வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங் களில் குளத்து நீரே குடிநீராகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் முதல் தற்போது வரை கடும் வெப்பம் நிலவி வருவதால் பெரும்பாலான குளங்கள், கண்மாய்கள் வறண்டு காணப்படுகின்றன.

தற்போது குளங்களில் உள்ள நீரின் அளவு குறைவாகக் காணப்படுவதால் அவற்றை குடிப்பதற்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் கிடைக்காத கிராம மக்கள் இரண்டு முதல் நான்கு கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள வேறு கிராமங்களுக்கு நடந்து சென்று குடிநீர் எடுத்துவருகின்றனர். குடிநீருக்காக அலையும் தங்க ளுக்கு சுத்திகரிக்கப்பட்ட நல்ல நீரை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரினர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பேய் போன்ற வேடமிட்ட இவர்கள் வாகனங்களில் சென்றவர்களை பயமுறுத்தியதுடன் நில்லாமல் திறந்த வெளியில் தூங்கிக்கொண்டிருந்தவர்களையும் குறிவைத்ததாகத் தெரிகிறது. படம்: ஊடகம்

13 Nov 2019

பேய் வேடமிட்டு பதற வைத்த இளையர்களைக் கைது செய்து கதறவிட்ட அதிகாரிகள்

காலக்கெடுவுக்குள் ஆட்சி அமைக்க இயலாததால், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மகாராஷ்டிர ஆளுநர் கோஷியாரி பரிந்துரைத்தார். படம்: ஊடகம்

12 Nov 2019

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி