சண்டிகர் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சண்டிகர்: சண்டிகர் அனைத்துலக விமான நிலையத்தை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக காவல்துறை யினருக்கு அடையாளம் தெரியாத சிலர் தகவல் தெரிவித் துள்ளனர். இதையடுத்து அந்த விமான நிலையத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் உடைமைகள் தீவிரமான பரிசோதனைக்கு உட்படுத்தப் படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும் விமான நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்த மிரட்டல் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கெனவே டெல்லி, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் விமான நிலையம் உள்பட நாடு முழுவதும் உள்ள 22 விமான நிலையங்களைத் தகர்க்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!