பழிதீர்க்கத் தயாராக இந்திய எல்லையில் பயங்கரவாதப் படை

பயங்கரவாதிகள் மீண்டும் ஊடு மீது நடவடிக்கை ருவி இருப்பதால் இந்திய -பாகிஸ்தான் எல்லையில் பதற் றம் நீடிக்கிறது. கிட்டத்தட்ட 250 பயங்கரவாதி கள் பாகிஸ்தானிலிருந்து இந்தி யாவின் காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி வந்து ஒளிந்திருப்ப தாகவும் இந்தியாவின் ‘சர்ஜிகல்’ தாக்குதலுக்குப் பதிலடி கொடுக் கும் வகையில் அவர்கள் எந்த நேரத்திலும் தாக்குதல் தொடுக் கலாம் என்றும் இந்திய அரசாங் கம் நம்புகிறது. அந்த 250 பேரும் லஷ்கர்- இ=தொய்பா, ஜெய்ஷ்-இ-முக மது, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த வர்கள் என்று உளவுத் துறைத் தகவல்களை மேற்கோள் காட்டி உயர் அரசாங்கத் தரப்புத் தகவல் தெரிவிக்கிறது.

பாதுகாப்புப் படையினர் மீது பதில் தாக்குதல் நடத்துவது எப்படி என்று பயங்கரவாதி களுக்கு அந்தந்த அமைப்புகளின் தலைமை தெளிவான வழிகாட்டு தல்களைச் சொல்லிக் கொடுத் திருப்பதாகவும் அந்தத் தகவல் குறிப்பிட்டது. எனவே ஜம்மு, காஷ்மீரில் உள்ள பாதுகாப்புப் படை வீரர்கள் உச்சபட்ச விழிப்புநிலையில் இருக் குமாறும் பயங்கரவாதிகளின் முயற்சிகளை முறியடிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை களில் ஈடுபடுமாறும் இந்திய அர சாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. இரு நாட்டு எல்லையில் ராணு வம் விழிப்பு நிலையில் இருந் தாலும் கடினமான நில அமைப்பு காரணமாக பல இடங்களில் இன்னும் இடைவெளிகள் இருப்பதாகவும் அவையே பயங்கரவாதிகள் ஊடுருவ ஏதுவாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே, சுமார் நூறு பயங் கரவாதிகள் ஊடுருவி இருப் பதாகக் கடந்த வாரம் செய்தி வெளியான நிலையில் அந்த எண்ணிக்கையை அரசாங்கம் உயர்த்தி இருப்பதாகக் கூறப்படு கிறது. இதற்கிடையே, காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஒளிந்திருக்கும் அரசாங்கக் கட்டடத்தில் இருந்து நேற்று விடியற்காலை 1 மணிக் கும் 5.30 மணிக்கும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும் அதைத் தொடர்ந்து கரும்புகை வெளிப் பட்டதாகவும் அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஊடகங்கள் குறிப்பிட்டன.