திருவரங்கம் கோவில் யானை துன்புறுத்தல்: பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: யானைகள் என்ன மாதிரியான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்து இந்து சமய அற நிலையத்துறை இரண்டு வாரங் களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர் நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ராதாராஜன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்:

தமிழகத்தில் உள்ள கோயில் களுக்கு நன்கொடையாக வழங்கப் படும் மாடுகள், கன்றுக்குட்டிகள், யானைகள் முறையாக பராமரிக்கப் படுவதில்லை. யானைகளுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 200 லிட்டர் தண்ணீர் தேவை. ஆனால், ஒரு வாளி தண்ணீர்தான் வழங்கப்படுகிறது. இதனால், தமிழகத்தில் 3 கோயில் யானைகள் அடுத்தடுத்து இறந் துள்ளன. ஸ்ரீரங்கம் கோயில் யானையை நடனம் ஆட வைத்து, பக்தர்களிடம் இருந்து நன்கொடை பெறு கின்றனர். எனவே கோயில்களில் உள்ள யானைகள், மாடுகள் உள்ளிட்ட விலங்குகளை பரா மரிக்க ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று கோரியிருந்தார்.

“திருவரங்கம் கோவிலில் உள்ள யானையை பொதுமக்கள் முன்னி லையில் நடனமாட வைப்பதாகவும் இதற்காக அந்த யானையை துன் புறுத்துவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. யானை நடனமாடும் வீடியோ காட்சியையும் நாங்கள் பார்வையிட்டோம். எனவே இந்த யானையை எதற்காக கோவில் நிர்வாகம் பயன்படுத்து கிறது? அந்த யானை கொடுமை செய்யப்படுகிறதா என்பது உள்ளிட்ட கேள்விகள் குறித்து 2 வாரத்துக்குள் திருவரங்கம் கோவில் நிர்வாகம் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 18ஆம் தேதிக்கு தள்ளிவைக் கிறோம்,” என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.