தமிழகத்தில் மூன்று தொகுதிகளில் தேர்தல்; அடுத்த வாரம் தேதி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் தேதி அடுத்த வாரம் அறி விக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் வாக் காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதனால் இரு தொகுதிகளின் தேர்தலை தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்தது. இந்த நிலையில் மதுரை மாவட்ட திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சீனிவேல் உடல் நலக் குறைவால் இறந்தார். இதனால் தற்போது மூன்று தொகுதிகளும் காலியாக உள்ளன.

சட்டமன்ற உறுப்பினர் மறைவு காரணமாக காலியாகும் தொகுதிக்கு ஆறு மாதங்களுக் குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதன் காரணமாக திருப்பரங் குன்றம் தொகுதிக்கு நவம்பர் 24ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும். இதையொட்டி மூன்று சட்ட மன்றத் தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் இடைத்தேர்தல் நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது. இதனால் அடுத்த வாரம் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப் படலாம் என்று தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறினார். இதற்கிடையே புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு சட்ட மன்றத் தொகுதிக்கும் இந்த மூன்று தொகுதிகளுடன் சேர்த்து இடைத் தேர்தல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

விபத்து ஏற்பட்ட பகுதியில் பொதுமக்களும் மீட்புப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சாலையில் கவிழ்ந்த பேருந்தும் லாரியும் பின்னர் அப்புறப்படுத்தப் பட்டன. படம்: ஊடகம்

19 Nov 2019

பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட கோர விபத்தில் 10 பேர் பலி; 25 பேர் படுகாயம்

நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெற எதிர்க்கட்சிகள் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். கோப்புப்படம்: ஏஎப்பி

19 Nov 2019

பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாக விவாதிக்க தயார் என்கிறார் பிரதமர்

உச்ச நீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக பாப்டேவுக்கு அதிபர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். படம்: ஊடகம்

19 Nov 2019

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பாப்டே பதவியேற்பு