அதிமுகவில் சசிகலாவுக்கு புதிய பதவி வாய்ப்பு

சென்னை: அதிமுக தலைவியும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா தற்போது சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவரது தோழி சசிகலா நடராஜன் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக ஆக்கப்படலாம் என்ற பேச்சு அதிமுக வட்டாரத்தில் பரவி வருகிறது. இதற்கு அச்சாரமாக தஞ்சை இடைத்தேர்தலில் சசிகலா நடராஜன் போட்டியிடலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரபூர்வத் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. தமிழகத்தில் மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கிறது. இதில் தஞ்சாவூர் தொகுதியும் ஒன்று. மற்றொரு தொகுதியான அரவக்குறிச்சி தொகுதியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியே மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

மூன்றாவது தொகுதியான திருப்பரங்குன்றத்தில் மறைந்த சீனிவேல் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் வேட்பாளராக நிறுத்தப் படலாம். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது பணப்பட்டுவாடா நடைபெற்றதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து தஞ்சாவூர், அரவக் குறிச்சி தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதற்கு முன்பு தஞ்சாவூர் தொகுதியில் மேலவை நாடாளு மன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் நிறுத்தப்படலாம் எனக் கூறப் பட்டது. முதல்வர் ஜெயலலிதா வுக்கு உடல் நிலைப் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் அவரது தோழி சசிகலா அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக ஆக்கப்படலாம் என்றும் அதற்கு ஏதுவாக தஞ்சாவூரில் அவர் களமிறங்கலாம் என்றும் கூறப்படு கிறது.