‘ரூ.10,000 கோடியைப் பதுக்கவில்லை’

நகரி: கருப்புப் பணத்தைப் பற்றி தாமாக முன்வந்து தகவல் தெரி வித்து வரி செலுத்துபவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, “ஆந்திராவி லிருந்து மட்டும் ரூ. 13,000 கோடி கருப்புப் பணத்துக்கு மத்திய அரசிடம் வரி செலுத்தி வெள்ளைப் பணமாக மாற்றப்பட்டுள்ளது,” என்றார். இதில் ஒரே நபர் ரூ. 10,000 கோடியை வெள்ளைப் பணமாக மாற்றியுள்ளார் என்றும் அவர் கூறினார். இதனால் தனிநபர் ஒருவர் 10,000 கோடி ரூபாயைச் சம் பாதிக்க முடியுமா, ஓர் அரசியல் வாதிதான் இந்தப் பணத்தைச் சம் பாதித்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இதற்கிடையே அமைச்சர் உமா மகேஸ்வர ராவ், கருப்புப் பணத் தைப் பதுக்கியவர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிதான் என்று கூறினார்.

ஆனால் இதற்கு மறுப்பு தெரி வித்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, ஜெகன் மோகன் ரெட்டி மீது ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டப்படுகிறது என்று கூறியது. இந்நிலையில் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் ஜெகன்மோகன் ரெட்டி, “மத்திய அரசிடம் வரி செலுத்தி கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றும் நபர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று கூறியுள்ள நிலையில் சந்திரபாபு நாயுடுவுக்கு எப்படி அந்தத் தகவல் தெரியும். எனவே சந்திரபாபு நாயுடு கூறிய கருப்புப் பணம் பதுக்கியவரின் பெயர் வெளியிடப்பட வேண்டும். நான் கருப்புப் பணம் பதுக்கியதாக பொய்க் குற்றசாட்டுகள் கூறப்படு கின்றன. ஊழலில் திளைத்திருக் கும் சந்திரபாபு நாயுடு பற்றி புத்த கம் எழுதி அதனுடன் ஆதாரங் களை இணைத்து உங்களுக்கு அளித்திருந்தோம். ஆனால் இது வரை அவர் மீது எந்த நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை,” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தச் சூழ்நிலையில் 10.000 கோடி ரூபாய் கருப்புப் பணத்தின் சொந்தக்காரர் யார் என்ற மர்மம் ஆந்திராவில் நீடிக்கிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

விபத்து ஏற்பட்ட பகுதியில் பொதுமக்களும் மீட்புப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சாலையில் கவிழ்ந்த பேருந்தும் லாரியும் பின்னர் அப்புறப்படுத்தப் பட்டன. படம்: ஊடகம்

19 Nov 2019

பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட கோர விபத்தில் 10 பேர் பலி; 25 பேர் படுகாயம்

நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெற எதிர்க்கட்சிகள் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். கோப்புப்படம்: ஏஎப்பி

19 Nov 2019

பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாக விவாதிக்க தயார் என்கிறார் பிரதமர்

உச்ச நீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக பாப்டேவுக்கு அதிபர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். படம்: ஊடகம்

19 Nov 2019

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பாப்டே பதவியேற்பு