வீட்டைவிட்டு துரத்தப்பட்ட கணவனுக்கு ஜீவனாம்சம்

வீட்டு வேலைக்காரனாக நடத்தப் பட்டு பின்னர் வீட்டைவிட்டே துரத் தப்பட்ட கணவனுக்கு மாதாமாதம் 2,000 ரூபாய் ஜீவனாம்சம் வழங்க பெண் ஒருவருக்கு மகாராஷ்டிர மாநிலத்தின் சோலாப்பூர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. சரிதா எனப்படும் அந்த 47 வயதுப் பெண் பள்ளிக்கூடம் ஒன் றில் தலைமை ஆசிரியையாக உள் ளார். கடந்த 2004ஆம் ஆண்டு கட்டப்பூர் என்னும் கிராமத்தில் உள்ள தனம்மா கோவிலில் வாழ்க் கைத் துணையைத் தேர்ந்தெடுப்ப தற்கான சுயவரம் நிகழ்ச்சி நடை பெற்றது. அப்போது சத்தாரா என் னும் பகுதியைச் சேர்ந்த அனில் என்பவரும் சரிதாவும் சந்தித்து மணம் புரிந்துகொள்ள விரும்பினர். மணமகன் அனில் சரிதாவைக் காட்டிலும் ஒன்பது வயது இளையவர். அத்துடன் படிப்பு வாசனை யும் இல்லாமல் உருப்படியான வேலையும் செய்யாமல் இருந்தவர். இருப்பினும், அனிலையே தமது வாழ்க்கைத் துணையாக சரிதா ஏற்றுக்கொண்டார்.

திருமணம் முடிந்து பத்து ஆண்டு காலம் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வந்த வேளையில் கடந்த 2014ஆம் ஆண்டு அவ்விருவருக்கும் இடையில் திடீ ரென்று விரிசல் ஏற்பட்டது. அனிலை வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்ய சரிதா உத் தரவிட்டிருந்தார். ஒருநாள் பாத் திரம் ஒன்றை உடைத்ததற்காக கணவர் என்றும் பாராமல் வாய்க்கு வந்தபடி திட்டிய சரிதா ஆத்திரம் தீராததால் வீட்டை விட்டே அனி லைத் துரத்திவிட்டார். பின்னர் அவரை விவாகரத்தும் செய்து விட்டார்.

வெளியில் வேலை எதுவும் செய்யத் தெரியாததால் வீதிகளில் உறங்கியதாகவும் எங்காவது கிடைக்கும் உணவைச் சாப்பிட்டு சிரமப்பட்டு வந்ததாகவும் சோலாப் பூர் நீதிமன்றத்தை அணுகி தமது குறைகளை விளக்கினார் அனில். சரிதாவை வரவழைத்து விசாரித்த நீதிபதி பி.வி.பாட்டீல், அனில் அளித்த வாக்குமூலம் சரியானது என்ற முடிவுக்கு வந்தார். பள்ளி தலைமை ஆசிரியையாக மனைவி நல்ல வேலையில், நல்ல சம்பளத்தில் இருக்கும்போது கணவன் மட்டும் அடுத்த வேளை உணவின்றி சாலையோரம் படுத்துறங்கும் நிலை ஏற்பட்டதை நீதிபதி சுட்டிக்காட்டினார்.