காவிரி மேலாண்மை வேண்டி போராட்டம் - ஸ்டாலின் கைது

ஸ்டாலின் உட்பட ஏராளமானோர் கைது காவிரிப் பிரச்சினையில் மத்திய அரசின் தமிழக விரோதப் போக்கைக் கண்டித்தும் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வலியுறுத்தியும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், விவசாய அமைப்புகள் நேற்று 48 மணி நேர ரயில் மறியல் போராட் டத்தைத் தொடங்கின. தமிழகம் முழுவதும் சுமார் 200 இடங்களில் நடந்த இப்போராட்டங் களில் ஏராளமான எதிர்க்கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் விவசாயிகளும் பங்கேற்றனர். இதன் காரணமாக பல இடங் களில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னை பெரம்பூரில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினையும் திமுகவினரையும் போலிசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அதே போல சென்னை சைதாப் பேட்டையில் மா.சுப்பிரமணியன், ஸ்ரீரங்கத்தில் கே.என். நேரு, தாம் பரத்தில் தா.மோ.அன்பரசன் உட் பட பல தலைவர்கள் தலைமையில் தமிழகத்தின் பல இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு திமுகவினர் கைதாகினர்.

சென்னை பேசின்பிரிட்ஜில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் ராமகிருஷ்ணன் ஆகியோர் ரயில் மறியலில் ஈடுபட முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப் பட்டனர். தஞ்சை, திருச்சி உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் தண்டவாளத்தில் நாற்று நட்டும் சமைத்தும் விநோதமான முறையில் விவசாயிகள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

 

திருச்சி குடமுருட்டி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் நாற்று நட்டு, அங்கேயே சமைத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள். படம்: தி இந்து

இப்பகுதியில் மேலும் செய்திகள்

காலக்கெடுவுக்குள் ஆட்சி அமைக்க இயலாததால், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மகாராஷ்டிர ஆளுநர் கோஷியாரி பரிந்துரைத்தார். படம்: ஊடகம்

12 Nov 2019

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி

கழுத்தில் மாலையுடன் இருக்க வேண்டிய மணமக்கள் இருவரும் துப்பாக்கிகளுடன் இருந்தது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்களைப் பீதிக்குள்ளாக்கியதாகக் கூறப்படுகிறது. படம்: ஊடகம்

12 Nov 2019

இயந்திரத் துப்பாக்கி ஏந்தி வந்த மணமக்கள்

ஓவியர் பிரணவைச் சந்தித்த முதல்வர் பினராயி, ஓவியரின் கால்களைப் பிடித்து 'கைகுலுக்கிப்' பாராட்டினார். படங்கள்: டுவிட்டர்

12 Nov 2019

கைகளின்றி 'கைகொடுத்த' ஓவியர்