13 வீடுகளில் நகை, பணம் கொள்ளையடித்த மூவர் கைது

தேவகோட்டை: 13 வீடுகளில் கொள்ளையடித்த 3 கொள்ளை யர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.25 லட்சம் மதிப்பிலான நகைகள் மீட்கப்பட்டன. சிவகங்கை மாவட்டம், தேவ கோட்டையிலும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் அண்மை காலமாக அடிக்கடி கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்று வந்தன. பந்தல் குத்தகையாளர், பேரா சிரியை உள்பட பலர் வீடுகளில் நகை, பணம் கொள்ளையடிக்கப் பட்டதாக போலிசாருக்கு புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து கொள் ளையர்களைப் பிடிக்க போலிசார் நகர்ப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மூவர் தனித்தனி மோட்டார் சைக்கிள்களில் அங்கு வந்தனர். அவர்களைப் போலிசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர்களது கேள்விகளுக்கு 3 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து அவர் களைக் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தபோது, அவர்கள் மூவரும் கொள்ளை யர்கள் எனத் தெரியவர கைதாகினர். தொடர்ந்து நடைபெற்ற விசார ணையில் அவர்களது பெயர் புது வயல் முருகேசன் (35), பிரம்புவயல் ராஜா என்ற வீரமணிராஜா (40), சிறுகவயல் சண்முக பிரகாஷ் (22) எனத் தெரியவந்தது. இவர்கள் தேவகோட்டை, ஆறாவயல், பள்ளத்தூர் பகுதிகளில் வீடு புகுந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் கண்டறியப்பட்டது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மதிய உணவு வாங்குவதற்காக வரிசையில் பிள்ளைகள் நின்றிருந்தபோது சிறுவன் புருசோத்தம் தவறி சூடான சாம்பார் பாத்திரத்துக்குள் விழுந்தான். படம்: ஊடகம்

16 Nov 2019

கொதிக்கும் சாம்பார் பாத்திரத்துக்குள் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு