10 ரூபாய் ஆசை; ரூ.2 லட்சம் மாயம்

வேலூர்: சென்னை வியாபாரி ஒருவரின் முன்பு 10 ரூபாய் பணத்தைப் போட்டு இரண்டு லட்சம் ரூபாயை மர்மக் கும்பல் கொள்ளை அடித்துச் சென்றது. சென்னையைச் சேர்ந்தவர் பூவேந்திர தவே, 64. இவர், கிருஷ்ணகிரியில் மருத்துவ உபகரணங்களை விற்பனை செய்ததில் வசூலான இரண்டு லட்சம் ரூபாயுடன் காரில் நேற்று வேலூர் வந்தார். அப்போது காரை ஓரிடத்தில் நிறுத்தி, பணப்பையை ஓட்டுநர் மோகனிடம் கொடுத்துவிட்டு அருகில் உள்ள தெருவில் பணம் வசூலிக்கச் சென்றார்.

அப்போது மூன்று பேர் கார் அருகில் வந்து ஓட்டுநர் மோகனிடம் “கீழே கிடக்கும் பணம் உங்களுடையதா,” எனக் கேட்க, மோகன் கீழே குனிந்து 10 ரூபாய் நோட்டை எடுப்பதற்குள் மூவரும் காருக்குள் இருந்த பணப்பையுடன் தப்பினர். மோகன் 10 ரூபாயை எடுத்தபின் கொள்ளையர்கள் எனத் தெரியாமல் மூவருக்கும் நன்றி கூறினார். பின்புதான் பணப்பை கொள்ளை போனது தெரியவந்தது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பிரதமர் மோடியை நேரில் சந்தித்தபோது மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக தாம் ஏதும் பேசவில்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். கோப்புப்படம்: ஊடகம்

22 Nov 2019

ஆட்சி அமைப்பது குறித்து பிரதமரிடம் ஏதும் பேசவில்லை என சரத்பவார் திட்டவட்டம்

81 வயதான பரூக் அப்துல்லா, கடந்த நூறு நாட்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டது குறித்து மத்திய அரசு முரண்பட்ட தகவல்களைத் தெரிவித்து வருவதாக எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன. கோப்புப்படம்: ஊடகம்

22 Nov 2019

காஷ்மீரில் 5,000 பேரை கைது செய்துள்ளதாக அரசு தகவல்

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் ரமேஷ் சென்னமானேனியின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது. படம்: ஊடகம்

21 Nov 2019

தெலுங்கானா எம்எல்ஏவின் குடியுரிமை பறிப்பு