திருநாவுக்கரசர்: மக்கள் நலனுக்காக தேமுதிகவுடன் இணைந்து போராடுவோம்

சென்னை: தமிழகத்தில் அரவக் குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங் குன்றம் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் காலியாக உள்ளன. விரைவில் இம்மூன்று சட்டசபைத் தொகுதிகளிலும் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிட தேமுதிக முடிவெடுத்து உள்ளது. இந்த மூன்று தொகுதிகளையும் கைப்பற்ற அதிமுக, - திமுக ஆகிய இரு கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. போட்டி கடுமையாக இருக்கும் என கூறப்படும் நிலை யில் தேமுதிகவும் இந்த தேர்தல் களத்தில் குதிக்கிறது. இதுகுறித்து, தேமுதிக வட்டாரங்கள் தெரிவித்ததாவது: “சட்டசபைத் தேர்தல் தோல் விக்குப்பின் தேமுதிகவில் இருந்து பலர் வெளியேறிவிட்டதால் கட்சி வலுவிழந்து விட்டது போன்ற தோற்றம் உள்ளது. “ஆனால், முன்பு போலவே இப்போதும் கட்சி பலமாகதான் உள்ளது என்பதை நிரூபிக்க மூன்று சட்டசபைத் தொகுதிகளுக் கான இடைத்தேர்தலில் போட்டியிட கட்சித் தலைவர் விஜயகாந்த் முடிவு செய்துள்ளார். “வேட்பாளர்கள் தேர்வை மாவட்ட செயலர்களிடம் ஒப்படைக்காமல் மாநில நிர்வாகிகளிடம் ஒப்படைத்து உள்ளார்.

“அவர்கள் தொகுதிக்கு மூன்று பேர் வீதம் தேர்வு செய்து அவர்களது பெயரை விஜய காந்திடம் தெரிவித்துள்ளனர். “விரைவில் இந்த ஒன்பது பேரையும் அழைத்துப் பேசி, அவர்களில் தகுதியான வேட்பாளர் களை விஜயகாந்த் அறிவிக்க உள்ளார்,” என்று தேமுதிக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையே, தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்துப் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் சு. திருநாவுக்கரசர், “உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகவுடன் கூட் டணி அமைக்கும் திட்டம் இல்லை. அவசியம் ஏற்பட்டால் மக்கள் நலனுக்காகத் தேமுதிகவுடன் இணைந்து போராடுவோம்,” என்று செய்தியாளர்களிடம் கூறினார். “தேமுதிக தலைவர் விஜய காந்தை மரியாதை நிமித்தமாக, நட்பு ரீதியில் சந்தித்தேன்.

உள்ளாட்சித் தேர்தல், தற்போது நிலவும் பொதுவான அரசியல் விஷயங்கள் குறித்து பேசினோம். “தேமுதிக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவ தாக அறிவித்து இருக்கிறார்கள். “எதிர்காலத்தில் மதுவிலக்கு போன்ற போராட்டங்கள் வரும் போது, அதற்கான தேவை ஏற்படும் போது அவசியம் ஏற்பட்டால் மக்கள் நலனுக்காகத் தேமுதிக வுடன் இணைந்து ஒரே களத்தில் நின்று போராட்டம் நடத்துவோம். “முதல்வர் ஜெயலலிதா குறித்து வதந்தி பரப்புவோர் மீது போலிசார் எடுத்து வரும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது; ஆனால் அது, அரசியல் உள்நோக்கம் இன்றி இருக்கவேண்டும்,” என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்துப் பொன்னாடை போர்த்தி கைகுலுக்குகிறார் தமிழக காங்கிரஸ் தலைவர் சு. திருநாவுக்கரசர். படம்: ஊடகம்