ஒடிசா: மருத்துவமனையில் தீ விபத்து; 24 பேர் பலி

இந்தியாவின் ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 24 பேர் மாண்டனர். நான்கு தளங்களைக் கொண்ட எஸ்யுஎம் மருத்துவமனையின் இரண்டாம் தளத்தில் ஏற்பட்ட அந்தத் தீ விபத்திற்கு மின்கசிவு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இரவு 7.30 மணியளவில் அங் குள்ள ரத்தச் சுத்திகரிப்பு மையத் தில் பற்றிய தீ, சில நிமிடங்களில் அந்தத் தளம் முழுவதும் பரவியது. சம்பவம் குறித்து அறிந்ததும் உடனடியாக பத்து தீயணைப்பு வாகனங்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மீட்கப்பட்ட நோயாளிகள் 15 அவசர மருத்துவ வாகனங்கள் மூலம் எய்ம்ஸ் உள்ளிட்ட மற்ற மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். “தீ பரவத் தொடங்கியதும் நோயாளிகளைப் பத்திரமாக வெளி யேற்றுவதே எங்களின் முதல் நோக்கமாக இருந்தது. தீயினால் உருவான புகையால் நோயாளி களுக்கு மூச்சுத் திணறல் ஏற் படாமல் இருப்பதற்காக சன்னல் கண்ணாடிகளையும் உடைத்தோம்,” என்றார் அந்த மருத்துவமனையின் துணைக் கண்காணிப்பாளர் பசந்த் பதி. போலிசார், தீயணைப்பு வீரர் கள், மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோருடன் தொண்டூழியர் களும் மீட்புப் பணியில் ஈடுபட் டனர். தீ பரவியபோது சுமார் 500 நோயாளிகள் அம்மருத்துவமனை யில் இருந்ததாகக் கூறப்பட்டது.

உயிரைக் காத்துக்கொள்ளும் நோக்கில் மேல் தளங்களிலிருந்து கீழே குதிக்க முயன்ற சிலரைத் தடுத்து, அவர்களைப் பாதுகாப்பாகமீட்டதாக போலிசார் கூறினர். சம்பவம் குறித்து அறிய நேர்ந் ததும் உடனடியாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கைத் தொலை பேசியில் தொடர்புகொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மாண்டோரின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்ததுடன் தேவையான உதவிகளை வழங்க மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தார். அத்துடன், தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வழிவகை செய்யும்படி மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டாவிற்கும் அவர் உத்தரவிட் டார். இதற்கிடையே, தீ விபத்து குறித்து விசாரிப்பதற்காக தனிக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. போலிசும் வழக்குப்பதிவு செய்து இருக்கிறது. அத்துடன், மாநிலத் தில் உள்ள எல்லா மருத்துவ மனைகளிலும் தீ பாதுகாப்புத் தணிக்கைக்குத் தீயணைப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கோவிலுக்கு வரவேண்டும் என யாராவது நினைத்தால், நீதிமன்றம் சென்று உரிய உத்தரவுகளுடன் வந்தால் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்தார். படங்கள்: ஊடகம்

15 Nov 2019

அமைச்சர்: சபரிமலைக்கு வரும் இளம்பெண்களுக்கு பாதுகாப்பு தரமாட்டோம்

மனிதர்கள் சுவாசிக்கத்  தகுதியற்ற அளவிற்கு காற்று மாசடைந்து உள்ளதால் இம்மாதம் முதல்  தேதி அங்கு மருத்துவ அவசர நிலை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. படம்: ஊடகம்

15 Nov 2019

புதுடெல்லி: சுவாசிக்க காற்றை விற்பனை செய்யும் ‘ஆக்சிஜன் பார்’