திட்டம் தீட்டும் பாஜக: தவிக்கும் தேமுதிக

சென்னை: சில கட்சிகள் தனித்துப் போட்டியிட முடிவு செய்திருப்பதால் தமிழகத்தில் மூன்று தொகுதி களுக்கான தேர்தலில் பலமுனைப் போட்டி நிலவும் என எதிர்பார்க் கப்படுகிறது. தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் நவம்பர் 19ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. வழக்கம்போல் இம்முறையும் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் அறிவிக் கப்பட்டுள்ளது. திமுகவில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தனித்து களம்காண இருப்பதாகக் கூறப்படுகிறது.

பாமகவைப் பொறுத்தவரையில் திருப்பரங்குன்றம் தொகுதியில் மட்டும் ஏற்கெனவே வெற்றிபெற்ற கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனித்துப் போட்டி என்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த் எடுத்துள்ள முடிவு, அக்கட்சி நிர்வாகிகள் மத்தியில் கடும் அதி ருப்தியையும் புலம்பலையும் ஏற்ப டுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த சில தேர்தல்களில் தேமுதிகவின் வாக்கு வங்கி சரிந்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் ஓரிடத்தில் கூட வெற்றி பெற முடியாத நிலையில், இம்முறை கூட்டணியின்றி களமிறங்குவது பின்னடைவை ஏற்படுத்தும் என நிர்வாகிகள் கட்சித் தலைமையிடம் தெரிவித்துள்ளதாகவும், விஜய காந்தோ தன் முடிவை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

உச்ச நீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக பாப்டேவுக்கு அதிபர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். படம்: ஊடகம்

19 Nov 2019

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பாப்டே பதவியேற்பு

இந்தியாவில் சிறந்த தேனிலவுத் தளமாக கேரளா தேர்வு செய்யப்பட்டுள்ளது. கோப்புப் படம்: ஊடகம்

19 Nov 2019

சிறந்த தேனிலவு தளமாக தேர்வு பெற்ற கேரளாவுக்கு விருது

விபத்து ஏற்பட்ட பகுதியில் பொதுமக்களும் மீட்புப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சாலையில் கவிழ்ந்த பேருந்தும் லாரியும் பின்னர் அப்புறப்படுத்தப் பட்டன. படம்: ஊடகம்

19 Nov 2019

பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட கோர விபத்தில் 10 பேர் பலி; 25 பேர் படுகாயம்