ஜெயலலிதாவைக் கவனிக்கும் சிங்கப்பூர் நிபுணர்கள்

தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு இன்றோடு முப்பது நாட்களா கின்றன. அவரது உடல்நிலை தேறி வரும் நிலையில் அடுத்த கட்ட சிகிச்சைக்கு மருத்துவர்கள் தயாராகி வருகிறார்கள். நேற்று முன்தினம் பிற்பகலில் லண்ட னுக்குத் திரும்பிச் சென்ற மருத் துவர் ரிச்சர்ட் ஜான் பீலே அடுத்த நான்கு நாட்களில் மீண்டும் அப் போலா மருத்துவமனைக்கு வர விருப்பதாக நேற்று தெரிவிக்கப்பட் டது.

அவரைப்போலவே எய்ம்ஸ் மருத்துவர்களும் டெல்லிக்குக் கிளம்பிச் சென்றுவிட்டனர். இதற்கிடையே, கடந்த நான்கு நாட்களாக சிங்கப்பூர் ‘பிசியோ தெரபி’ நிபுணர்கள் ஜெயலலிதா வுக்குச் சிகிச்சை அளித்து வரு வதாகவும் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையைச் சேர்ந்த அந்த நிபுணர்களின் பெயர் சீமா, மேரி என்றும் ‘மாலைமலர்’ இணையச் செய்தி தெரிவித்துள்ளது. இந்த இருவருடன் அப்போலா மருத்துவ மனையின் பிசியோதெரபி நிபுணர் களும் சிகிச்சையில் இணைந்துள் ளதாக அது குறிப்பிட்டது.இந்நிலையில், ஜெயலலிதா இன் னும் ஒரு வாரத்தில் வீடு திரும்பு வார் என்று அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

சிங்கப்பூர் ‘பிசியோதெரபி’ நிபுணர்கள் சீமா, மேரி என்று இவர்களை ‘மாலைமலர்’ இணையச் செய்தி படத்துடன் குறிப்பிட்டுள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்