சசிகலா புஷ்பா துணிச்சல் பேட்டி: பிரதமர் மோடியின் ஆதரவு எனக்கு இருக்கிறது

சென்னை: சசிகலா நடராஜன் தரப்பினர் தமக்கு தொடர்ந்து பல் வேறு வகையிலும் மிரட்டல்கள் விடுத்து வருவதாகவும், வழக்கு கள் மூலம் அச்சுறுத்த முயற்சிப்ப தாகவும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப் பினர் சசிகலா புஷ்பா குற்றம்சாட்டி உள்ளார். அவர் அளித்துள்ள அண்மைய பேட்டியில், பிரதமர் மோடி தமக்கு ஆதரவு வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். “நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல் வத்திற்குக் கொடுக்கப்பட்ட இடத்தைப் பிடிப்பதும் தஞ்சையில் சசிகலா நடராஜன் வேட்பாளராக நிற்க வேண்டும் என்பதுதான் அவர்களின் திட்டம். எனவேதான் கட்சியின் துணைப் பொதுச் செய லாளராக ஆகும் முனைப்போடு செயல்பட்டார் சசிகலா.

“ஆனால் முதல்வரின் கையெ ழுத்தைப் பயன்படுத்தி மோசடி நடக்கலாம் என நான் பேச ஆரம்பித்ததும், சசிகலா நடராஜன் பின்வாங்கிவிட்டார். ஒருவேளை அவர் தேர்தலில் போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாது என்பதையும் உணர்ந்து கொண்டார்,” என சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார். சொந்த சமூகத்திலேயே சசிகலா நடராஜனுக்கு ஆதரவு இல்லை என்பதே உண்மை என்று குறிப்பிட்ட அவர், சசிகலா நடரா ஜனின் முயற்சிகள் பலிக்காத கோபத்தில்தான் தமக்கு மிரட் டல்கள் விடுக்கப்படுவதாகக் கூறியுள்ளார்.

தமிழகத்தின் தற்போதைய சூழலுக்கு ஒரு முதல்வர் தேவை என்றும், நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு மீண்டும் அதிகாரங்கள் கொடுக்கப்பட்டதில், சசிகலா நடராஜன் தரப்புக்கு அறவே விருப்பமில்லை என்றும் சசிகலா புஷ்பா குறிப்பிட்டுள்ளார். “என்னை இயக்குவது பாஜக தான். மத்திய அரசின் மூலம்தான் இவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டும் என சில வேலைகளில் இறங்கி இருக்கிறேன். என்னுடைய அனைத்து முயற்சிகளுக்கும் மத்திய அரசு ஆதரவாக இருக்கிறது.

“பாஜகவில் மூத்த தலைவர் கள், பிரதமரின் ஆதரவும் எனக்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் அரா ஜக போக்குடன் செயல்பட்டு, முதல்வரை ஏமாற்றி ஆட்சியைப் பிடிக்க நினைத்தால் கட்டாயம் குரல் கொடுப்பேன்,” என சசிகலா புஷ்பா திட்டவட்டமாகக் கூறி உள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

உச்ச நீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக பாப்டேவுக்கு அதிபர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். படம்: ஊடகம்

19 Nov 2019

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பாப்டே பதவியேற்பு

இந்தியாவில் சிறந்த தேனிலவுத் தளமாக கேரளா தேர்வு செய்யப்பட்டுள்ளது. கோப்புப் படம்: ஊடகம்

19 Nov 2019

சிறந்த தேனிலவு தளமாக தேர்வு பெற்ற கேரளாவுக்கு விருது

விபத்து ஏற்பட்ட பகுதியில் பொதுமக்களும் மீட்புப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சாலையில் கவிழ்ந்த பேருந்தும் லாரியும் பின்னர் அப்புறப்படுத்தப் பட்டன. படம்: ஊடகம்

19 Nov 2019

பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட கோர விபத்தில் 10 பேர் பலி; 25 பேர் படுகாயம்