கோ-ஆப்டெக்ஸ் அறிமுகப்படுத்தி உள்ள ‘ஆர்கானிக்’ பட்டுச் சேலைகள்

ரசாயனக் கலவையால் சுற்றுச் சூழலுக்கும் மனிதர்களுக்கும் ஏற்படும் பாதிப்பு, செயற்கை உரங்களால் நிலம், நீர் மாசடை வது போன்ற பாதிப்புகள் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தீபா வளி பண்டிகைக்கு கோ-ஆப் டெக்ஸ் நிறுவனம் ஆர்கானிக் பட்டு சேலைகளை அறிமுகம் செய்துள்ளது.

“ரசாயனம் சேர்க்கப்பட்ட ஆடைகளால் உடலில் தோல் தொடர்பான நோய்கள் மற்றும் சுவாசப் பிரச் சினைகள் ஏற்படும். ஆர்கா னிக் உடைகளை அணியும் போது சரும பாதிப்பு தவிர்க் கப்படும். கோடையாக இருந் தாலும் உடலில் உஷ்ணம் தெரியாது,” என்கிறார் கோ-ஆப்டெக்ஸ் மேலாளர் சரவணன். படம்: ஊடகம்