இடைத்தேர்தலில் போட்டியிடாமல் அச்சத்தில் ஒதுங்கும் கட்சிகள்

சென்னை: தமிழகத்தில் மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அடுத்த மாதம் 19ஆம் தேதி அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப் பரங்குன்றம் ஆகிய தொகுதி களில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முக்கிய கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகள் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி நிற் கின்றன. அதிமுக, திமுக, பாமக, பாஜக ஆகிய கட்சிகள் மட்டுமே போட்டியிடுவதாக அறிவித்து உள்ளன. மற்ற கட்சிகள் ஆர்வம் காட் டாமல் ஒதுங்கியிருக்கின்றன. அப்படியே போட்டியிட்டால் வைப்புத் தொகைகூட கிடைக்காது என்ற அச்சம் உதிரி கட்சிகளிடம் நிலவுகிறது. அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் அதிகமான அளவுக்குப் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.

அதையடுத்து தேர்தல் ஆணையம் மேற்கொண்ட சோத னையில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் இரண்டு தொகுதி களுக்கான தேர்தலை ஆணையம் ஒத்திவைத்தது. திருப்பரங்குன்றத்தில் தொகுதி எம்எல்ஏ சீனிவேல் திடீர் மரண மடைந்தார். இதையடுத்து அந்தத் தொகுதியும் காலியானதாக அறி விக்கப்பட்டு இடைத்தேர்தல் நடை பெறுகிறது. தமிழகத்தின் 3வது பெரிய கட்சி என்று தன்னை வருணித்துக் கொள்ளும் நடிகர் விஜய்காந்தின் தேமுதிகவும் ஒதுங்கியிருக்கிறது. வைகோவின் மதிமுக, திருமா வளவனின் விடுதலைச் சிறுத் தைகள் கட்சி உட்பட நான்கு கட்சிகளை உள்ளடக்கிய மக்கள் நலக் கூட்டணியும் குழப்பத்தில் மிதக்கிறது. காங்கிரசிலிருந்து பிரிந்த ஜி.கே.வாசனின் தமாகாவும் போட் டியிடப் போவதில்லை என்று கூறி யுள்ளது. ஆனால் பாரதிய ஜனதா, பாமக தேர்தலைச் சந்திக்க ஆயத்தமாகி வருகின்றன.