­­­­­­­­­­­­­­­­­­­ம­க­தாயி நதிநீர் பங்­கீட்டு விவ­கா­ரம்: கன்­ன­டர்­கள் மீது தாக்­கு­தல்

பெங்களூரு: கர்­நா­டக மாநி­லத்­துக்­கும் கோவா மாநி­லத்­துக்­கும் இடையே பாயும் மகதாயி நதி நீர் பங்­கீட்டு விவ­கா­ரத்­தில் இரு மாநிலங்களுக்கு இடை­யே­யும் பிரச்­சினை நீடிக்­கிறது. மகதாயி நதியில் கால்வாய் அமைக்க எதிர்ப்­புத் தெரி­விக்­கும் கோவா மாநி­லத்தைக் கண்­டித்து வட கர்­நா­டக மாவட்­டங்களில் போராட்­டங்கள் நடைபெறுகின்றன. கோவாவி­லும் கர்­நா­ட­காவைக் கண்­டித்­துப் போராட்­டங்கள் வலுத்­துள்­ளன. கோவா மாநி­லத்­தில் டிஸ்க் உகோவா பகு­தி­ யில் வசித்த 5 கன்­ன­டக் குடும்பத்­தி­னரை மர்மக் கும்பல் தாக்­கி­யது. மேலும் 5 கன்­ன­டக் குடும்பங்களின் வீடுகள் தாக்­கப்­பட்டு 3 இரு சக்கர வாக­னங்களும், 3 கார்­களும் தீயிட்­டுக் கொளுத்­தப்­பட்­டுள்­ளன. கோவா காவல்­துறை­யி­னர் தாக்குதல் நடத்திய மர்ம நபர்­களைத் தேடி வரு­கின்ற­னர்.

தாக்­கு­த­லுக்­குக் கர்­நா­டக அர­சி­யல் கட்­சி­யி­ன­ரும் கன்னட அமைப்­பி­ன­ரும் விவசாய சங்கத்­தி­ன­ரும் கடும் கண்ட­னம் தெரி­வித்­துள்­ள­னர். கன்னட அமைப்­பி­ன­ரின் எதிர்ப்­பினால் கோவாவில் இருந்து கர்­நா­ட­கா­ செல்லும் பேருந்­து­கள் அம்­மா­நில எல்லை­யி­லேயே நிறுத்­தப்­பட்­டன. இதேபோல கர்­நா­ட­கா­வில் இருந்து கோவா­வுக்­குச் செல்லும் பேருந்­து­களும் நிறுத்­தப்­பட்­டன. பெல்­கா­மில் விவசாய அமைப்­பி­ன­ரின் போராட்­டத்தைத் தொடர்ந்து இரு மாநில எல்லை­யில் பதற்­றம் ஏற்­பட்­டுள்­ளது. இதனால் துணை ராணுவப் படை­யி­னர் எல்லை­யில் குவிக்­கப்­பட்­டுள்­ள­னர்.­­­

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!