தமிழக ஆடவருக்கு பாரிஸ் தாக்குதல் நபருடன் தொடர்பு

ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருப்பதாகச் சந்தேகத் தின்பேரில் தமிழகத்தின் நெல்லை மாவட்டம், கடையநல்லூரில் இம்மாதத் தொடக்கத்தில் கைது செய்யப்பட்ட சுபஹானி ஹாஜா மொய்தீன், பாரிஸ் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவனே தனது குழுவிற்குத் தலைவன் என்று தெரிவித்துள்ளான். கடந்த ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி பாரிஸ் நகரில் பல இடங்களில் ஐஎஸ் பயங்கரவாதி கள் நடத்திய தாக்குதல்களில் 130 பேர் கொல்லப்பட்டனர். அத்தாக்குதல்களில் பங்குபெற்ற அப்தெல்ஹமீத் அபௌட், சலா அப்தெஸ்லாம், ஒமர் இஸ்மாயில் மொஸ்டெஃபி ஆகிய மூன்று பயங்கரவாதிகளின் பெயர்களை இந்திய தேசிய புலனாய்வு அதி காரிகளிடம் சுபஹானி கூறிய தாகத் தெரிவிக்கப்பட்டது. ஐஎஸ் அமைப்பில் இணைந்து போரிட்ட சுபஹானி 2015 ஏப்ரல் 8ஆம் தேதி சென்னையிலிருந்து சிரியா சென்றான்.

"துருக்கி வழியாக ஈராக்கில் நுழைந்த சுபஹானி, அங்கு சமயப் பாடங்கள் குறித்தும் ஏகே 47 துப்பாக்கி, கையெறிகுண்டு ஆகியவற்றைக் கையாள்வது குறித்தும் வெடிகுண்டு செய்வது குறித்தும் பயிற்சி பெற்றான். பாரிஸ் தாக்குதல்காரர்களில் ஒருவன் அந்தக் குழுவிற்குத் தலைமை தாங்கினான்," என்று இந்தியப் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் சொன்னார். ஆயினும், அபௌட், அப்தெஸ் லாம், மொஸ்டெஃபி ஆகியோரில் யார் அக்குழுவின் தலைவர் என்பது சொல்லப்படவில்லை. இந்த விவரங்கள் குறித்து பிரெஞ்சு அதிகாரிகளுக்கும் புதுடெல்லியில் உள்ள பிரெஞ்சுத் தூதரகத்திற்கும் தேசிய புலனாய் வுப் பிரிவு தகவல் தெரிவித்து விட்டதாக அறியப்படுகிறது. மோசுல் நகரில் இருந்தபோது முழங்காலில் காயமடைந்ததால் 2015 செப்டம்பர் 22ஆம் தேதி இந்தியா திரும்பிய சுபஹானி, பாரிஸ் தாக்குதல்களுக்கும் தனக் கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் கூறியிருக்கிறான்.

அண்மையில் கடையநல்லூரில் கைதான சுபுஹானி (முகம் மூடப்பட்டவர்) ஐஎஸ் அமைப்பில் இணைந்து ஈராக்கில் பல்வேறு ஆயுதப் பயிற்சிகளைப் பெற்றவன். படம்: இந்திய ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!