நாராயணசாமி: வேட்பாளரை விலை பேசவில்லை

புதுவை: நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் அங்கு களமிறக்கப்பட்டுள்ள அதிமுக வேட்பாளரை தாம் விலைபேச முயன்றதாக எழுந்துள்ள புகாரை புதுவை முதல்வர் நாராயணசாமி திட்டவட்டமாக மறுத்துள்ளார். நேற்று முன்தினம் அத்தொகுதியில் வாக்கு சேகரித்த பின்னர் செய்தி யாளர்களிடம் பேசிய அவர், அதிமுக வேட்பாளரை தாம் ஒருமுறை கூட பார்த்தது இல்லை என்றார். புதுவை நெல்லித்தோப்பு தொகுதியில் நவம்பர் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் அதிமுக சார்பில் ஓம்சக்தி சேகரும் காங்கிரஸ் சார்பில் முதல்வர் நாராயணசாமியும் போட்டி யிடுகின்றனர்.

இந்நிலையில் அதிமுக வேட்பாளரை விலைபேச முயன்றதாக நாராயணசாமி மீது குற்றம்சாட்டப்பட் டுள்ளது. “அதிமுக வேட்பாளரைச் சந்திக்க வேண்டிய அவசி யமும் எனக்கு கிடையாது. அவரை நான் பார்த்ததும் இல்லை, ஒருமுறைகூட பேசியதும் இல்லை. காங்கி ரஸ், திமுக கூட்டணி அரசின் நூறு நாள் சாத னைகளை எடுத்துக் கூறி யும் தொகுதி வளர்ச்சிக் கான எதிர்கால திட்டங் களை விளக்கியும் வாக்கு சேகரிக்கிறேன்,” என்றார் நாராயணசாமி. மேலும், இடைத்தேர்தலில் தாம் அதிக வாக்கு வித்தி யாசத்தில் அமோக வெற்றி பெறப்போவது உறுதி என் றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.