சமூக வலைத்தளம் மூலம் பெண்களை ஏமாற்றிய ஆடவர் கைது

வேலூர்: சமூக வலைத்தளம் மூலம் பெண்களுக்கு வலை விரித்து ஏமாற்றிய இளையரை வேலூர் காவல்துறையினர் கைது செய்தனர். நாகர்கோவிலைச் சேர்ந்தவர் அம்மையப்பர். 35 வயதான இவ ருக்கு ஃபேஸ்புக் மூலம் வேலூரைச் சேர்ந்த 30 வயதான பாக்கியலட்சுமி என்ற பெண் அறிமுகமானார். இதையடுத்து, இருவரும் காதலிக்கத் துவங்கினர். பின்னர் இக்காதல் திருமணத்தில் முடிந் தது. இருவரும் கடந்தாண்டு ஜனவரி மாதம் திருச்சி முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் அம்மையப்பர் தன் சொந்த ஊருக்குச் செல்ல வில்லை. மாறாக மனைவி பாக்கிய லட்சுமி வீட்டிலேயே தங்கிவிட்டார். இந்நிலையில், மனைவிக்குத் தெரியாமல் சமூகவலைத்தளம் மூலமாகவே வேறொரு பெண்ணி டம் நட்பு பாராட்டத் துவங்கினார் அம்மையப்பர். திருவள்ளூரைச் சேர்ந்த 25 வயதான ராமலட்சுமி என்ற அந்தப் பெண்ணுடன் அவர் ரகசியமாகக் காதல் வளர்த்து வந் தார்.

ஒரு கட்டத்தில் இதுகுறித்து பாக்கியலட்சுமிக்குத் தெரிய வந்தது. இதனால் கடும் அதிர்ச்சியும் ஆவேசமும் அடைந்த அவர் கணவரைத் தட்டிக் கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு மூண் டது. எனினும் தனது காதலை ரக சியமாகத் தொடர்ந்து வந்தார் அம்மையப்பர். இதற்கிடையில், பாக்கியலட்சுமி தாய்மை அடைந் தார். இந்த வாய்ப்பைப் பயன் படுத்திக்கொண்ட அம்மையப்பர், தனது சமூக வலைத்தள காதலி யான ராமலட்சுமியைச் சந்தித்துப் பேசியுள்ளார். இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் ராமலட்சுமியையும் திரும ணம் செய்த அம்மையப்பர், காஞ்சி புரத்தில் தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளார். இதுகுறித்து அறிந்து வேதனை யடைந்த பாக்கியலட்சுமி, பொறுமை இழந்தார். உடனடியாக வேலூர் காவல்துறையின் மகளிர் பிரிவில் தனது கணவர் மீது புகார் செய் தார். அதன் பேரில் விசாரணை நடத் திய போலிசார், அம்மையப்பரைக் கைது செய்துள்ளனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஹைதராபாத்தில் ஒரே பாதையில் நேருக்கு நேர் வந்த ரயில்கள் மோதிக் கொண்டதில் ஆறு பயணிகள் காயம் அடைந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது. படம்: இந்திய ஊடகம்

12 Nov 2019

ஹைதராபாத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்