வெள்ளியால் இழைக்கப்பட்ட 14 வீடுகள்; தங்கம்; பணம்

ஹைதராபாத்: ஆந்திராவில் போக்கு வரத்துத் துறையில் பணியாற்றும் ஒரு அரசு அதிகாரியான பூர்ண சந்திரராவ், 55, தனது பதவியைப் பயன்படுத்தி உதவி வழங்குவதற்காக 8,000 ரூபாயை ஒரு வாகன உரிமையாளரிடம் இருந்து லஞ்சமாகப் பெற்றபோது கையும் களவுமாகப் பிடிபட, அவரை லஞ்ச ஒழிப்புப் போலிசார் கைது செய்தனர். இதுகுறித்து அவரிடம் மேலும் விசாரணை நடத்தியபோது, கணக் கில் காட்டப்படாத அவரது சொத்து விவரங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. அதிகாரியின் 14 வீடுகளிலும் வெள் ளிப் பொருட்களாலேயே அறைகள் வார்த்து இழைக்கப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட 1 கிலோ எடைக்கு மேல் தங்கப் பொருட்களும் கட்டுக் கட்டா கப் பணமும் குவித்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை போலிசார் குண்டூரில் உள்ள பூர்ண சந்திரராவின் வீட்டில் அதிரடிச் சோதனை நடத்தினர். அந்த வீட்டின் ஒரு அறை முழுவதும் வெள்ளிப் பாத்திரங்களும் தங்க நகை களும் குவிந்து கிடந்தன. இதைப் பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். மொத்தம் 60 கிலோ வெள்ளியும் 1 கிலோ தங்கமும் இருந்தது. அத்துடன் ரூ.20 லட்சம் ரொக்கப் பணமும் அந்த அறையில் பதுக்கி வைக்கப் பட்டு இருந்தது. மேலும் ஏராள மான சொத்துகளுக்கான ஆவணங்களும் சிக்கின.

இதையடுத்து பூர்ண சந்திர ராவ் மீது வருமானத்துக்கு அதிக மாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, பணிக்குச் சேர்ந்த 34 வருடத் தில் இத்தனை சொத்துகளை அவர் சேர்த்த விதம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குண்டூர், ஓங்கோல், நெல்லூர் நகரங்களில் இவர் பணியாற்றிய போது சட்டத்திற்கு விரோதமாக லஞ்சப் பணத்தை வாங்கிக் குவித்திருப்பது இந்த சொத்து களின் மூலம் அம்பலமாகியுள்ளது.

இவருக்கு வினுகொண்டா பகுதியில் 7 அபார்ட்மெண்டுகள், 2 வீடுகள், குண்டூரில் 1 வீடு, ஹைதராபாத், விஜயவாடா நகரங் களில் தலா 2 பிளாட்டுகள் சொந்தமாக உள்ளன. வினுகொண் டாவில் இயங்கும் ஒரு தானிய மில்லுக்கும் இவர் சொந்தக்காரராக உள்ளது தெரியவந்துள்ளது. இத்தனையும் அம்பலமான பிறகும் தான் ஒரு உத்தமர், ஊழல் கறை படியாதவர் எனக் கூறி வருகிறார் பூர்ண சந்திரராவ். தனது சொத்து மதிப்பு ரூ.3 கோடிதான் என்றும் இது வருமானத்திற்கு உட்பட்டதுதான் எனவும் அவர் கூறுகிறார். ஆனால் குறைந்தபட்சம் என்றாலும் ரூ.25 கோடிக்கும் குறையாத சொத்து கள் பூர்ண சந்திரராவுக்கு இருக்கும் என்கிறார்கள் லஞ்ச ஒழிப்புத் துறையினர். இது சில சொத்துகளின் மதிப்புதான், இன் னும் நிறைய கண்டுபிடிக்க வேண்டியது உள்ளது. தொடர்ந்து சொத்துகளை ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

 

கணக்கில் காட்டப்படாத சொத்துகளையும், வெள்ளி, தங்கம், பணத்தையும் பார்த்து அதிர்ச்சியில் ஆழ்ந்த அதிகாரிகள். படம்: ஊடகம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

விபத்து ஏற்பட்ட பகுதியில் பொதுமக்களும் மீட்புப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சாலையில் கவிழ்ந்த பேருந்தும் லாரியும் பின்னர் அப்புறப்படுத்தப் பட்டன. படம்: ஊடகம்

19 Nov 2019

பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட கோர விபத்தில் 10 பேர் பலி; 25 பேர் படுகாயம்

நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெற எதிர்க்கட்சிகள் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். கோப்புப்படம்: ஏஎப்பி

19 Nov 2019

பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாக விவாதிக்க தயார் என்கிறார் பிரதமர்

உச்ச நீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக பாப்டேவுக்கு அதிபர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். படம்: ஊடகம்

19 Nov 2019

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பாப்டே பதவியேற்பு