மெட்ரோ ரயில் நிலையத்தில் இளம்பெண் படுகொலை

புதுடெல்லி: டெல்லி அருகே குர்கானில் உள்ள எம். ஜி. ரோடு மெட்ரோ ரயில் நிலையத்தில் 34 வயது பெண் ஒருவரை 26 வயது ஆட்டோ ஓட்டுநர் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். படுகொலை செய்யப்பட்ட பெண் பிங்கி தேவி எனவும் அவர் மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த திருமணமான பெண் எனவும் தெரியவந்துள்ளது. அழகு நிலையம் ஒன்றில் பணிபுரிந்து வந்த பிங்கி தேவிக்கு ஜிஜேந்தர் என்ற ஆட்டோ ஓட்டுநர் நீண்ட நாட்களாகத் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலை யில் நேற்று காலை 9.30 மணிக்கு ரயில் நிலையத்துக்கு சென்ற ஜிஜேந்தர் சிங்தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிங்கி தேவியை சரமாரியாகக் குத்தி யுள்ளார். உடனடியாக அங்கிருந்த பாதுகாப்புப் படை வீரர்கள் பிங்கி தேவியை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் உயிரிழந்தார். கொலையாளி ஜிஜேந்தர் சிங்கை பாதுகாப்பு வீரர்கள் பிடித்து குர்கான் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். போலிசார் ஜிஜேந்தரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பேருந்திலிருந்து கீழே தள்ளிவிடப்பட்ட மாணவிக்கு பற்கள் உடைந்ததுடன், நெற்றியிலும் காயம் ஏற்பட்டது. படம்: ஊடகம்

20 Nov 2019

ஓடும் பேருந்திலிருந்து மாணவியைக் கீழே தள்ளிய நடத்துநர்

பிரசாதம் வாங்க நெகிழிப் பைகளுக்குப் பதில்  சணல், காகிதம், அட்டை போன்றவற்றாலான பைகள், பெட்டிகள் பயன்படுத்தப்பட வேண்டும் பக்தர்களை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. கோப்புப்படம்

20 Nov 2019

சணல் பையில் லட்டு; திருமலை ஆலய நிர்வாகம் முடிவு