நீக்கிய 4 அமைச்சர்களை மீண்டும் சேர்க்க முடிவு

லக்னோ: ஒருவரை பதவியில் இருந்து நீக்குவதும் சேர்ப்பதும் அரசியலில் சகஜமப்பா என்று கூறப்படுவது போல் உத்தரப் பிரதேசத்தில் முன்னதாக நீக்கப் பட்ட 4 அமைச்சர்களையும் மீண் டும் சேர்த்துக்கொள்ள சமாஜ்வாடி கட்சி முடிவு செய்துள்ளது. உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவுக்கும் அவருடைய சித்தப்பாவும் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவருமான சிவபால் சிங்குக்கும் இடையே அண்மையில் மோதல் ஏற்பட்டது. அமர்சிங் எம்.பி.க்கு ஆதரவாக சிவபால் சிங் செயல்பட்டதாகக் கூறி அவர் உள்பட நரத் ராய், ஓம் பிரகாஷ் சிங், ஷதாப் சயீதா ஆகிய 4 அமைச்சர்களையும் அகி லேஷ் அதிரடியாக நீக்கினார்.

மகனின் தடாலடி நடவடிக் கையால் அதிர்ச்சியடைந்த சமாஜ் வாடியின் தேசியத் தலைவரான முலாயம் சிங் யாதவ், அகிலே ‌ஷுக்கு ஆதரவாகச் செயல்பட்ட தனது இன்னொரு தம்பியும் டெல்லி மேலவை எம்.பி.யுமான ராம்கோபால் யாதவின் தேசிய செயலாளர் பதவியைப் பறித்தார். இதனால் அகிலேஷ் யாதவ்- சிவபால் சிங் இடையே பனிப்போர் வெளிப்படையாக வெடித்தது. இந்நிலையில், நேற்று நடந்த உயர்மட்ட குழுக் கூட்டத்தில் அகிலேஷ் யாதவ் தரப்பில் சிவபால் உள்பட நீக்கப்பட்ட 4 அமைச்சர் களையும் உடனடியாக அமைச்சர வையில் சேர்த்துக்கொள்வது என ஒப்புக்கொள்ளப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!