ரூ.40 கோடி லஞ்சவழக்கு: எடியூரப்பா விடுதலை

பெங்களூர்: கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா மீது ரூ.40 கோடி லஞ்சம் வாங்கிய தாக சுமத்தப்பட்ட ஊழல் வழக்கில் இருந்து பெங்களூரு சிறப்பு சிபிஐ நிதிமன்றம் விடுதலை செய்துள் ளது. எடியூரப்பாவின் குடும்ப உறுப்பினர்களும் இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்யப் பட்டுள்ளனர். இந்த தீர்ப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, "நீதி வென்றுள்ளது. நான் குற்றமற்றவன் என்பது நிரூ பணமாகி உள்ளது. கடினமான தருணங்களிலும் என்னுடன் பக்கபலமாக நின்றவர்களுக்கும் நலம் விரும்பிகள், நண்பர்கள், ஆதரவாளர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள் கிறேன். சத்தியமேவ ஜெயதே," என்று டுவிட்டர் சமூக வலைத் தளத்தில் தகவல் பகிர்ந்துள்ளார்.

"நான் மகிழ்ச்சியாக இருக்கி றேன். நான் எப்பொழுதுமே நீதித் துறை மீது அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்துள்ளேன். இந்த உத்தரவு நம்முடைய லட்சக்கணக் கான பணியாளர்களுக்கு ஒரு உந்துசக்தியைக் கொடுக்கும்," என எடியூரப்பா மேலும் கூறினார். எடியூரப்பா முதல்வராக இருந்த போது தனது செல்வாக்கைப் பயன்படுத்தி ரெட்டி சகோதரர் களிடம் இருந்து 40 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு, அவர் களுக்கு நிலக்கரி ஒப்பந்தத்தை வழங்கியதாகக் குற்றம் சாட்டப் பட்டது. எடியூரப்பாவுடன் அவரது இரு மகன்கள், மருமகன் உள் ளிட்ட நால்வர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!