பிறந்து இரு தினங்களே ஆன ஆண் குழந்தை கடத்தல்

சேலம்: பிறந்து இரு தினங்களே ஆன ஆண் குழந்தை அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வாழப்பாடியைச் சேர்ந்த 23 வயதான இந்து என்பவருக்கு கடந்த திங்கட்கிழமை ஆண் குழந்தை பிறந்தது. புதன்கிழமை இந்து கழிவறை சென்ற போது அவருக்கு உதவியாக இருந்த அவரது தாயும் வெளியே சென்றிருந்தார்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மர்மப் பெண் ஒருவர், குழந்தையை எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து இந்து, போலிசில் புகார் அளித்த நிலையில், மருத்துவமனை ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. மேலும் குழந்தை கடத்தப்பட்டது குறித்து சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தேடுதல் வேட்டை நடக்கிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பேருந்திலிருந்து கீழே தள்ளிவிடப்பட்ட மாணவிக்கு பற்கள் உடைந்ததுடன், நெற்றியிலும் காயம் ஏற்பட்டது. படம்: ஊடகம்

20 Nov 2019

ஓடும் பேருந்திலிருந்து மாணவியைக் கீழே தள்ளிய நடத்துநர்

பிரசாதம் வாங்க நெகிழிப் பைகளுக்குப் பதில்  சணல், காகிதம், அட்டை போன்றவற்றாலான பைகள், பெட்டிகள் பயன்படுத்தப்பட வேண்டும் பக்தர்களை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. கோப்புப்படம்

20 Nov 2019

சணல் பையில் லட்டு; திருமலை ஆலய நிர்வாகம் முடிவு