ராமகிருஷ்ணன்: கூட்டணியில் கருத்து வேறுபாடு ஏதும் இல்லை

புதுவை: மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் மத்தியில் எந்தவித கருத்து வேறுபாடுகளும் எழவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். புதுவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி நதிநீர் பிரச்சினையில் மக்கள் நலக் கூட்டணி ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வருவதாகக் கூறினார். "எங்கள் கூட்டணியில் எந்த ஒரு கருத்து வேறுபாடும் இல்லை. திமுக கூட்டிய அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பில் மதிமுக பொதுச்செயலர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலர் திருமாவளவன் இடையே கருத்து வேறுபாடும் எழுந்ததாகக் கூறுவதில் உண்மை இல்லை.

"எந்த ஒரு பிரச்சினை குறித்தும் மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் அனைவரும் கலந்து பேசியே முடிவெடுத்து வருகிறோம். அதன்படிதான் திமுக கூட்டம் குறித்தும் விவாதித்து முடிவெடுத்தோம்," என்றார் ஜி. ராமகிருஷ்ணன். எனினும் திருமாவளவன், வைகோ இடையே மறைமுக மோதல் நடந்து கொண்டிருப்ப தாகத் தமிழக ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.2016-10-27 06:00:00 +0800

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!