தேர்தல் புறக்கணிப்பு: மார்க்சிஸ்ட்கள் எதிர்ப்பு

சென்னை: மூன்று தொகுதிகளுக்கான தேர்தலைப் புறக்கணிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்திருப்பதற்கு அக்கட்சி யினர் மத்தியிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் கட்சியின் அடிப்படை கொள்கை யில் இருந்து மார்க்சிஸ்ட் விலகிச் செல்வதாக விமர்சனமும் எழுந் துள்ளது. தஞ்சை, அரவக்குறிச்சி, திருப் பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலைப் புறக்கணிப்பதாக மக்கள் நலக் கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார். இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் மாநிலச் செயலர் ராம கிருஷ்ணன், வைகோ கூறியதை வழிமொழிந்தார். எனினும் இந்த முடிவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் உள்ளிட்ட ஜனநாயக வழிமுறைகளை பின்பற்றியும், நடைமுறைப்படுத்தி யும் மட்டுமே அரசியல் செய்ய வேண்டும் என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை கொள்கையாகும். ஆனால் அதற்கு மாறாக தேர்தலைப் புறக்கணிப்பது ஏற்பு டையதல்ல என்று அக்கட்சி நிர்வாகிகள் பலர் கருதுகின்றனர். இது குறித்து மாநிலத் தலைமை யிடம் அவர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்திய தாகவும் கூறப்படுகிறது.

“திமுக, அதிமுகவுக்கு மாற் றாக இருப்போம் என கூறிவிட்டு, தேர்தலைப் புறக்கணிப்பதன் மூலம், யாருக்கோ ஆதரவாக செயல்படுகிறோம் என்ற சந்தேகம் வராதா?” என்று மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் சிலர் மாநிலத் தலைமைக்குக் கடிதம் எழுதி இருப்பதாக தமிழக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.