பணபலம்: கட்டுப்படுத்த தமிழிசை வலியுறுத்து

திருச்சி: மூன்று தொகுதிகளுக் கான தேர்தலில் அமைச்சர்களின் பணபலம் பயன்படுத்தப்படுவதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும் எனத் தமிழிசை சௌந் தரராஜன் கேட்டுக் கொண்டுள் ளார். திருச்சியில் செய்தியாளர்களி டம் பேசிய அவர், மூன்று தொகுதி களிலும் பாஜக வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். “பணப் பட்டுவாடா காரண மாகவே தஞ்சை, அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிகளுக் கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மீண்டும் அதே தவறு நடக்காமல் இருக்க தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்.

“தமிழக அமைச்சர்களின் அதிகார பலம், பணபலம் பயன் படுத்தப்படுவதை அனுமதிக்கக் கூடாது. இதைத் தேர்தல் ஆணை யம் கண்காணிக்க வேண்டும்,” என்றார் தமிழிசை. ஒட்டு மொத்த விவசாயிகளும் பாஜகவுக்கு எதிராக இருப்பது போல் பொய்ப் பிரசாரம் மேற் கொள்ளப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், இதனைத் தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள் என்றார். இத்தகைய பொய்ப் பிரசாரங் களை முறியடித்து மூன்று தொகு திகளிலும் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்று குறிப்பிட்ட அவர், விவசாயிகளுக் காக போராடுவதாக கூறும் வைகோ, 3 தொகுதி இடைத் தேர்தலைப் புறக்கணித்தது ஏன் எனக் கேள்வி எழுப்பினார். “காவிரி நீர் பிரச்சினைக்காக திமுக நடத்தியது அரசியல் சார்புடைய அனைத்துக் கட்சிக் கூட்டம் ஆகும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளின் நலனை முன்னிறுத்தி நிறைய நல்ல காரியங்களைச் செய்து உள்ளது.

“உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 2,000 கன அடி தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டிக்கிறேன். தமிழக விவசாயிகளுக்கு பாஜக நன் மையே செய்யும்,” என்றார் தமிழிசை. முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை மீது பிரதமர் மோடிக்கு எந்தவித அக்கறையும் இல்லை யென கூறப்படுவது சரியல்ல என்று குறிப்பிட்ட அவர், தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி அவ்வப்போது கேட் டறிந்து வருவதாகக் கூறினார். முதல்வர் ஜெயலலிதாவும், திமுக தலைவர் கருணாநிதியும் நலம் பெற்று அரசியல் பணியில் ஈடுபட வேண்டும் எனவும் அவர் வாழ்த்துத் தெரிவித்தார். மூன்று தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்து பாஜகவும் தேர்தல் பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளது.