திருநாவுக்கரசர்: விமர்சனத்தை தவிர்த்திடுக

சென்னை: காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தர விட்ட பிறகும் மத்திய அரசு மறுத்துவிட்டதாக தமிழக காங்கி ரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டி உள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மு.க.ஸ்டாலின் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கா தவர்கள், அக்கூட்டத்தின் நோக்கம் குறித்து விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது என்றார். “மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேச மறுக்கிறார். நாங்கள் நடத்தும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை யும் அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை பற்றியும் விமர்சிக்கிறார். வைகோவும் இதுபோன்றுதான் நடந்து கொள்கிறார்.

“இவர்கள் கண்டனம் தெரிவிப் பதால் விவசாயிகளுக்கு என்ன லாபம்? கூட்டத்துக்கு வரவில்லை என்றாலும் சரி, கண்டனம் தெரிவிப்பதையும், விமர்சிப்பதையும் செய்யாமல் இருந்தால் நல்லது,” என்றார் திருநாவுக்கரசர். காவிரி விவகாரத்தில் கட்சி வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், மத்திய அரசு தமிழகத்துக்கு நியாயம் கிடைக்க வழி செய்ய வேண்டும் என்றார். அண்மைக்காலமாக திமுகவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த அவர், தற்போது அக்கட் சிக்கு ஆதரவு தெரிவித்து பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பிரதமர் மோடியை நேரில் சந்தித்தபோது மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக தாம் ஏதும் பேசவில்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். கோப்புப்படம்: ஊடகம்

22 Nov 2019

ஆட்சி அமைப்பது குறித்து பிரதமரிடம் ஏதும் பேசவில்லை என சரத்பவார் திட்டவட்டம்

81 வயதான பரூக் அப்துல்லா, கடந்த நூறு நாட்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டது குறித்து மத்திய அரசு முரண்பட்ட தகவல்களைத் தெரிவித்து வருவதாக எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன. கோப்புப்படம்: ஊடகம்

22 Nov 2019

காஷ்மீரில் 5,000 பேரை கைது செய்துள்ளதாக அரசு தகவல்

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் ரமேஷ் சென்னமானேனியின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது. படம்: ஊடகம்

21 Nov 2019

தெலுங்கானா எம்எல்ஏவின் குடியுரிமை பறிப்பு