4 பாக். ராணுவ நிலைகள் தகர்ப்பு

அத்துமீறித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்தின் மீது இந்தியா நடத்திய பதிலடித் தாக்குதலில் பாகிஸ்­தா­னின் நான்கு ராணுவ நிலைகள் அழிக்கப்பட்டுள்ளன. சென்ற வெள்­ளிக்­கிழமை இந்திய எல்லைக்­குள் ஊடுருவி ராணுவ வீரர்­களைத் தாக்கிய பாகிஸ்­தான் ஆக்­கி­ர­மிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த பயங்கரவாதிகள் மன்ஜீத் சிங் எனும் இந்திய ராணுவ வீரரைக் கொன்று அவரது உடலைக் கொடூ­ர­மா­கச் சிதைத்து வீசினர்.

இந்தக் கொடுஞ்செயலை இந்திய வீரர்­கள் அறி­யா­த­ வண்­ணம் பாகிஸ்தானிய வீரர்­கள் தீ உருவாக்கி மறைவு ஏற்படுத்­திக்­ கொ­டுத்­த­தா­கக் கூறப்படு­கிறது. அதற்­குக் கடும் கண்ட­னம் தெரி­வித்த இந்தியா, தகுந்த பதிலடி கொடுக்­கப்­படும் என்று எச்­ச­ரித்­தி­ருந்தது.

இந்நிலையில், நேற்று முன் ­தி­னம் இரவு வேளையில் சண்டை நிறுத்த ஒப்­பந்தத்தை மீறி பாகிஸ்­தா­னிய வீரர்­கள் கெரன் பகு­தி­யில் இந்திய வீரர்­கள் மீது தாக்­கு­தல் நடத் ­தி­னர். இந்திய ராணுவம் அதற்­கு எதிர்த் தாக்குதல் நடத்திய போது இந்திய வீரர் ஒருவர் பலியானார். ஐந்து மணி நேரத்­துக்கு விட்டுவிட்டு இருதரப்பிலிருந் தும் தாக்­கு­தல்கள் தொடர்ந்த தாகக் கூறப்பட்டது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கோவிலுக்கு வரவேண்டும் என யாராவது நினைத்தால், நீதிமன்றம் சென்று உரிய உத்தரவுகளுடன் வந்தால் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்தார். படங்கள்: ஊடகம்

15 Nov 2019

அமைச்சர்: சபரிமலைக்கு வரும் இளம்பெண்களுக்கு பாதுகாப்பு தரமாட்டோம்

மனிதர்கள் சுவாசிக்கத்  தகுதியற்ற அளவிற்கு காற்று மாசடைந்து உள்ளதால் இம்மாதம் முதல்  தேதி அங்கு மருத்துவ அவசர நிலை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. படம்: ஊடகம்

15 Nov 2019

புதுடெல்லி: சுவாசிக்க காற்றை விற்பனை செய்யும் ‘ஆக்சிஜன் பார்’